X

Tips

குறிப்பு

நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும். கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து சேர்த்து வைத்திருக்க. விதைகளைச் சுட்டுப் புகையைச் சொத்தைப் பல்லில் படச் செய்தால் சொத்தை நீங்கும்; பல்வலியும் நீங்கும். புளியும் உப்பும் கலந்து ஈறுகளில் தேய்த்தால் பல்லரணை என்னும் ஈறு வீக்கம் போகும்; பல் வலியின் போது சொத்தைப் பல்லின் மேல் வைத்தால் வலி நீங்கும் Read More

சிந்தனை துளிகள்

பணம் எப்போது உறவாக இராது. உறவு தான் எப்போது பணமாக நிற்கும். வாழ்க்கை இயற்கை அளிக்கும் செல்வம், ஆனால் நல்ல வாழ்க்கை அறிவு அளிக்கும் செல்வம். எருதைப் போல் பொறுமையாக இரு. சிங்கத்தைப் போல் தைரியமாக இரு. தேனீயைப் போல சுறுசுறுப்பாக இரு. பறவையைப் போல் உற்சாகமாக இரு. Read More

கோடை வெயிலை சமாளிக்க

கோடை ஆரம்பமானதிலிருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். உஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. ஆக வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது கோடை காலத்தில் வெயிலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு… Read More

யூகலிப்டஸ் எண்ணெய்

ஊட்டிக்குப் போய்வருகிற பெரும்பாலானவர்கள் பையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும் பொருள் யூகலிப்டஸ் எண்ணெய் . நாசியைத் துளைக்கும் இதன் நறுமணம் காரணமாக, ஒரு சொட்டை முகர்ந்து பார்த்தாலே நமக்குப் புத்துணர்வு கிடைத்துவிடும் உணர்வு தோன்றிவிடும். தலைவலி மருந்தாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய், `நீலகிரித் தைலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தலைவலியைத் தவிர வேறு என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் இது தீர்வு தரும்? பார்க்கலாம்...Read More Read More

பக்தி

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகி விடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகி விடும்.! பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.! செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.! வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகி விடும்.! பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.! இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.! ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகி விடுகிறான்.! மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!! Read More

சாப்பாட்டு தத்துவம்

தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும் ! ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்! லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!! சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!! வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்! பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!! கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!! தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும். தாமதமான‬ வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க முடியாது!! தன்னம்பிக்கைச்‬  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்! வெற்றி என்பது இட்லியை போல வேகுவது… Read More

மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்

மகிழ்ச்சி மற்றும் தனிமனிதப் பரிபூரண நிலை (Personal Fulfillment) என்ற இரண்டும் சரியான விஷயங்களைச் செய்வதனாலேயே ஏற்படுகிறது. உலகத்தைப் புரிந்து கொள்கிறேன் என்று நினைக்காமல், என் பாதையை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என்று செயல்படுவதும், தார்மீக ரீதியான முன்னேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று நினைக்கச்சொல்லும் சித்தாந்தத்தினை கொண்டவர் எபிக்டெடஸ். இவர் தன் கருத்துகளை, அவருடைய சீடர் களிடையே உரையாக நிகழ்த்தியுள்ளார். அவரது சீடர்களே அவற்றை எழுத்து வடிவில் எழுதிப் பாதுகாத்துள்ளனர். ராணுவ வீரர்கள் போருக்குப் போகும் போது ஒரு கையேட்டினை எடுத்துச் செல்வார்கள். அந்த வடிவமைப்பிலேயே எபிக்டெடஸின் கருத்துகளும் கையேடாகத் தரப்பட்டுள்ளது. ஷரான் லீபெல் என்பவர் தொகுத்து தந்துள்ள கிரேக்க தத்துவ ஞானியான எபிக்டெடஸ்-ன் ‘வாழ்வதற்கான கையேடு’ என்கிற புத்தகம். Read More Read More

10 கட்டளைகள்

நாம் நினைவில் கொள்ள வேண்டிய சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!! இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள். விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள். பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள். விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள். கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள். மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள். கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள். Read More

சிந்தனை துளிகள்

குரு ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் கட்டாயமாகத் தேவை. புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டில் இருந்த ஒரு மனிதனை விடுவிப்பதற்கு, குருவால் மட்டுமே முடியும் என்று உபநிடதங்கள் உரை க்கின்றன. குரு ஒருவனுக்குள் இருக்கும் தடைகளை அகற்ற வழி செய்கிறார். நாம் உழைக்க வேண்டும். குருவும் உதவி செய்ய வேண்டும். - ஶ்ரீரமணர் Read More

கோலங்கள்

“குடும்ப நலம் காக்கும்” முன்னோர்கள் உருவாக்கிய வீட்டு வாசலில் கோலமிடும் பழக்கம். குடும்பம் ஒரு கோவில் போன்றது. அங்கே அன்பும் ஒற்றுமையும் மிகுந்திருக்கும் பொழுது அருளும் பொருளும் தேடி வரும்.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.