உலக பாரம்பரிய தினம்
உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day). அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. அது சரி..இந்த உலக பாரம்பரிய நாள் தோன்றியதை கொஞ்சம் விளக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ: 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “International Day for Monuments and Sites” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.”World Heritage Day”. Read More Read More