உலக மக்கள்தொகை தினம்
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2011 அக்., 31ல் 700 கோடியாக உயர்ந்தது. தற்போது இது 760 கோடியாக உள்ளது. இது 2050ல், 980 கோடியாகவும், 2100ல் 1,120 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில், இந்தியா 16 சதவீதத்தை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, 2024ம் ஆண்டு சீனாவை முந்தி விடும் என ஐ.நா., புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. சீனா மக்கள் தொகை தற்போது 142 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. இச்சாதனையை இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்தியா முறியடித்துவிடும் என ஐ.நா., தெரிவிக்கிறது. உலகின் மக்கள்தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை 137 கோடி. இரண்டாவது… Read More