ஸ்நானம்
மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும். ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.Read More Read More