X

ஆன்மீகம்

ஐந்தின் தத்துவம்

வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய - தூல பஞ்சாட்சரம் சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ - காரண பஞ்சாட்சரம் சி - மகா காரண பஞ்சாட்சரம் 3.சிவமூர்த்தங்கள் 1.பைரவர் -வக்கிர மூர்த்தி 2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி 3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி 4.நடராசர் -ஆனந்த மூர்த்தி 5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி 4.பஞ்சலிங்க சேத்திரங்கள் 1.முக்திலிங்கம் -கேதாரம் 2.வரலிங்கம் -நேபாளம் 3.போகலிங்கம் -சிருங்கேரி 4.ஏகலிங்கம் -காஞ்சி 5.மோட்சலிங்கம் -சிதம்பரம் 5.பஞ்சவனதலங்கள் 1.முல்லை வனம் -திருக்கருகாவூர் 2.பாதிரி வனம் -அவளிவணல்லூர் 3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி 4.பூளை வனம் -திருஇரும்பூளை 5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர் 6.பஞ்ச ஆரண்ய தலங்கள் 1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம் 2.மூங்கில் காடு -திருப்பாசூர் 3.ஈக்காடு -திருவேப்பூர் 4.ஆலங்காடு -திருவாலங்காடு… Read More

சந்திராஷ்டம ஸ்லோகம்

வணக்கம் நண்பர்களே!! இணையத்தில் நான் படித்து தெரிந்தது உங்கள் பார்வைக்கு. சந்திராஷ்டமத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க ஸ்லோகம் ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம் ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம் தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும் ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம். - சந்திர பகவான் துதி பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன். (இத்துதியை திங்கட்கிழமைகளிலும், சந்த்ராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; சந்திர தோஷங்கள் தீரும்.) Read More

விநாயகர் மந்திரம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். கஜாநநம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸூதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாத பங்கஜம். எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே மூல மந்திரம் *ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே* *வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா* இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். வல்லப கணபதி மூல… Read More

பூமாதேவி ஸ்லோகம்

முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது.. ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’ -என்பதாகும். அதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள். Read More

ஆடிப்பெருக்கு

ஆடியும் இயற்கை அறிவியலும் சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். அதன்படி தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களை உத்திராயனம் என்றும் ஆடி முதல் கார்த்திகை வரையிலான அடுத்த ஆறு மாதங்களை தட்சிணாயனம் என்றும் அழைத்தனர். உத்திராயனம் என்பது சூரியக் கதிர்கள் வடதிசை நோக்கி நகர்தல், தட்சிணாயனம் என்பது அவை தென்திசை நோக்கி நகர்தல். இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான்… Read More

மந்திரங்கள் – பாகம் -3

மந்திரங்கள் பற்றிய முந்திய பதிவு தொடர்ச்சி. வாழ்வை வளமாக்கும் பத்து மந்திரம்(ஸ்லோகம்). #செயலில் பக்கபலம்! காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்! ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி! #கல்வியே கடவுள்! கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது.… Read More

குத்து விளக்கை சுத்தப்படுத்தும் நாட்கள்

குத்து விளக்கை துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு. ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும். திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குக குரு தன தாட்சணியும் குத்து விளக்கில் பூரணமாய் குடியிருப்பதாய் கூறப்படுகின்றது. எனவே இந்த நாட்களில் விளக்கினை தேய்த்து கழுவினால் இந்த சக்திகள் விலகிப் போகுமென்பது நம்பிக்கை. வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப்போய்விடும் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை. ஞாயிறன்று விளக்கை துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று துலக்கி தீபம் ஏற்ற வேண்டும். குரு பார்வை இருந்தால் கடினமான வேலைகளையும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எளிதாக செய்ய முடியுமே. வியாழன் அன்று தீபமேற்றினால் குருவின் பார்வையும் அது தரும் கோடி… Read More

ஆடிப்பூரம்

மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் தேவர் களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக் காலமே தட்சிணாயன காலம் ஆகும். அதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது இடது பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த… Read More

ஆலய தரிசனம்

வணக்கம்!! நாம் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று வருவோம், இன்று நம் முன்னோர்கள் ஆலய தரிசன முறைகள் மற்றும் விதிகள் என்ன என்பதை நான் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை. கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.… Read More

வைகாசி விசாகம்

எனது முதல் பதிவின் வைகாசி விசாகம் தொடர்ச்சி. முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள் முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் நடைபெறும் தீமிதித் திருவிழா, மிகவும் பிரபலம். பிரமாண்டமான பூக்குழியை பலநூறு பக்தர்கள் ஆவேசம் பொங்க கடந்து செல்லும் காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவின் போது அருகிலுள்ள வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக இங்கு… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.