X

ஆன்மீகம்

மஹாளய பட்சம்

மகாளய அமாவாசை பற்றி தெரிந்துகொள்ள 28.9.18 மஹா பரணி எனப்படும் பஞ்சமி ஸ்ரார்த்தம் 03.10.18 நவமி ஸ்ரார்த்தம் 06.10 .18 மக ஸ்ரார்த்தம் எனப்படும் திரயோதசி ஸ்ரார்த்தம் 07.10.18 சதுர்தசி ஸ்ரார்த்தம் 08.10.18 மகாளய அமாவாசை Read More

ஓம் சிவாய நம! கோவிந்தா!!கோவிந்தா!!

இன்று புரட்டாசி 6ம் நாள் சனிக்கிழமை. பொதுவாக புரட்டாசி மாதம் என்றல் புனிதமான மாதம். பெரும்பாலான மக்கள் அசைவம் விட்டு சைவமாக ஒருமாத காலம் விரதம் மாதிரி கடைபிடிப்பார்கள். அறிவியல் பூர்வமாக இந்த மாதம் மழை மற்றும் வெயில் இருப்பதால் புலால் உண்ணாமல் இருப்பது நலம் என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை சொல்லுகிறது. ஒரு விஷயம் பார்த்தீர்களா சில நாட்களுக்கு முன் திருமலையில் தேரோட்டம் நடந்து முதல் சனிக்கிழமை பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கு முக்கியமான சனி மகா பிரதோஷம். சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக்… Read More

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

வணக்கம்! இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது இந்து சமயத்தில் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறது. விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:– இதோ 21 இலைகள் (பத்ரம்): மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம். விநாயகர் மந்திரங்கள் வாக்குண்டாம் நல்ல… Read More

ஆடி அமாவாசை

வணக்கம். நமது அறிவியல் மற்றும் ஆதி கால மனிதனின் கூற்றுபடி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும்; பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன எனவும்; பூமி தனது அச்சில் 23 ½ பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன என்றும் நாம் அறிந்ததே. பூமி மற்றும் சந்திரன் பற்றிய சில அறிவியல் குறிப்பு சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. இதனால் நம்மால் சந்திரனை காண முடியவில்லை. அப்படி சந்திக்கும் நேரத்தில் சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, அமையும் போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. இதுவே பௌர்ணமி; மாற்று கூற்றில் அமாவாசை. சூரியனைப் “பிதுர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது.… Read More

மழை பெய்ய ஸ்லோகம்

என்னடா தலைப்பை பார்த்து சிரிப்பா இருக்கா. இந்த நவீன உலகத்தில் இதல்லாம் நடக்குமா என்று. முயற்சி பண்ணுவோமென சின்னதாக ஒரு கண்ணொளி. மழை பெய்ய வைக்கும் ஸ்லோகம் காஞ்சி மகாபெரியவர் அருளியது. ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஒரு ஆடிமாதத்தில் திருவையாறுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க அவரிடம் வழி கேட்டார்கள். ரிச்யச்ருங்காய முநயே விபண்டக ஸுதாயச நம: சாந்தாதி பதயே ஸத்ய: ஸத் வ்ருஷ்டி ஹேதவே. விபண்டகஸுத: ஸ்ரீமாந் சாந்தாபதி ரகல்மஷ: ரிச்ய ச்ருங்க இதிக்யாத: மஹாவர்ஷம் ப்ரயச்சது: அப்போது மகா பெரியவர், மேற்கண்ட இரண்டு ஸ்லோகங்களை தினமும் ப்ரணாயாமம் செய்யும்படி அருளினார். நாமும் மனப்பூர்வமாகப் பாடி, மழைவளம் பெறுவத்திற்கான ஒரு சின்ன முயற்சி. Read More

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்​தை நிர்ணயிக்கும் ஆற்றல் ​பெற்றிருந்தனர். ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழி​கை, 31 வினாடி, 15 தர்ப்ப​ரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய வருடம் என்பது பூமி சூரிய​னைச் சுற்ற எடுத்துக் ​கொள்ளும் காலமாகும். சந்திர வருடம் என்பது சந்திர​னை அடிப்ப​​டையாகக் ​கொண்டது. இரண்டுக்கும் உள்ள ​வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும். 5 வருடத்திற்கு ஒரு மு​றை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவா​சை வரும். Read More Read More

காலை வணக்கம் -இன்று 27ம் பங்குனி

இன்று உலக ஓமியோபதி தினம் - ஜெர்மன் நாட்டு மருத்துவர் சாமுவேல் ஹானிமோன் தனக்கு வந்த மலேரியா காய்ச்சலை குணமாக்க அதிக அளவில் சின்கோனா மரப்பட்டை சாறை குடித்து குணமடைந்தார். விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு 'ஓமியோபதி' என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இழந்த செல்வத்தை வழங்கும் வராகினி வழிபாடு- திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறது. ஓம் ச்யாமளாயை விக்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் என்ற வராகினி காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறப்பு. நன்றி:தினத்தந்தி Read More

மகா சிவராத்திரி

வணக்கம். இன்று(13-Feb-2018) மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம். விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. மகா சிவராத்திரி விரதம் Read More

மந்திரங்கள் – 4

முருகன் மந்திரம் “ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ” [செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பின் 6 முதல் 7 மணிக்குள்ளாக பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து பின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.] காயத்ரீ மந்திரம் ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் ஓம் நமோ பகவதே சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய பக்த பரிபாலனாயா தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா!… Read More

தைப்பூசம்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சஷ்டி கவசம், சண்முக கவசம்,திருப்புகழ் போன்ற முருகனருள் பெற உதவும் பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம் . தைப்பூசத்தில் மாலை நேரத்தில் பழனி கோயிலில் தேரோட்டம் நடைபெறும், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.