X

ஆன்மீகம்

வைகுண்ட ஏகாதேசி -06.01.2020

வணக்கம். இன்று வைகுண்ட ஏகாதேசி. கோவிந்தா ! நாமோ நாராயணா! வைகுண்ட வாசா வெங்கட்ராமனா! வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More

சூரிய கிரகணம் -26.12.2019

காலை நிகழும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரண ஒளி கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. சூரிய கிரகணத்தை சோலார் கண்ணாடி மூலமாக பார்ப்பது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக நேரப்படி காலை 8 மணி தொடங்கும் சூரிய கிரகணம் முற்பகல் 11.30 மணி வரை நீடிக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டம் இல்லையென்றால் சூரிய கிரகணத்தை முழுவதுமாக பார்க்க முடியும். பரந்து விரிந்திருக்கும் வானில் அவ்வப்போது பல அற்புதங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. அது போன்று ஒரு ஆச்சரியமே நாளை நிகழும் சூரிய கிரகணம்...சூரியன் -நிலவு- பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. அதாவது சூரியனை நிலவு நேர்கோட்டில் மறைப்பதை சூரிய… Read More

இன்று-09.11.2019

வணக்கம். இன்று சனி பிரதோசம். ஐப்பசி மாதம் வந்திருக்கும் இந்த பிரதோசத்தின் சிறப்பு திபாவளி மற்றும் கந்தசஷ்டி முடிந்தபின் வந்துள்ளது. உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். “நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர் சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே.” (என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்) Read More

இன்று-08.10.2019

வணக்கம். இன்று விகாரி புரட்டாசி மாதம் 21ம் நாள் செவ்வாய் கிழமை தசமி திதி. விஜய தசமி. "ஸ்லோகம்" ஓம் விஜயா தேவியை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தந்நோ தேவி பிரச்சோதயாத் தளத்தை பார்வையிடும் தங்களுக்கு விஜய தசமி வாழ்த்துக்கள். Read More

இன்று ஆனி 10-25.06.2019

இன்று ஆனி 10 ம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை அஷ்டமி(பகவதாஷ்டமி). நாம் எல்லாருக்கும் அஷ்டமி பற்றி தெரிந்து இருக்கும் . இன்னும் பல விஷயங்கள் உங்களுக்காக இதோ. அஷ்டமி வழிபாடு அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும்.   பைரவ வழிபாடு அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.  தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. அஷ்டமி நாளில் உச்சி வேளையில்… Read More

இன்று ஆனி 8ம் நாள்

வணக்கம்! இன்றைய தத்துவம்: " யாரையும் இழந்து விடாதீர்கள், இழப்பது எளிது.. பெறுவது கடினம்.. அது பொருளாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி …" ஞானிகள் சொன்ன குறிப்பு நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள்,படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி செடிகளுக்கு விட்டு விட வேண்டும். அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின்ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும். தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்… • சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம் • வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் •… Read More

இன்று-மகா சிவராத்திரி

வணக்கம். இன்று மாசி மாதம் சிவராத்திரி. சிவனைப் போற்றும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு வழக்கம் இந்த சிவராத்திரி. ஏன் சிவராத்திரி - பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல்… Read More

பஞ்சபுராணம்

பஞ்சபுராணம் பற்றி ஒரு சிறு குறிப்பு திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம். அவற்றை ஓதும் வரிசை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருவிசைப்பா 4. திருப்பல்லாண்டு 5. திருப்புராணம் நமது வாசகர்களுக்காக இந்த சுலப பஞ்சபுராணம் விநாயகர் வணக்கம் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே." தேவாரம் - ( திருஞானசம்பந்தர் அருளியது ) "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே." திருவாசகம் - ( மாணிக்கவாசகர் அருளியது ) "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய… Read More

கொலு தத்துவம்

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரிப்பதாகும். Read More Read More

குரு பெயர்ச்சி

வணக்கம். விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் புரட்டாசி 18 ஆங்கிலம் : 04 October 2018 வியாழக்கிழமை தசமி இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம் சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம் உலக வன விலங்குகள் தினம். குரு பெயர்ச்சி பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்தவர் குரு பகவான்(பிருகஸ்பதி). இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார்.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.