X

ஆன்மீகம்

ஆடி அமாவாசை – 28-07-2022

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.Read More Read More

மகாசிவராத்திரி-01-03-2022

மகாசிவராத்திரி அன்று தூய்மையான மனதோடு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, மனதார ஒரு முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுடைய பிறவிப் பலனை நீங்கள் பெறலாம் என்ற ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோம். ஆனால் எல்லோருடைய உடல்நிலையும் இதற்கு ஒத்துழைக்காது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து உங்களுடைய விரதத்தை மேற்கொள்ளலாம். அதன்மூலம் எந்த தெய்வ குற்றமும் ஏற்படாது. சிவராத்திரி என்றாலே தூங்காமல் கண் விழிக்க வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். முறைப்படி தூங்காமல் எப்படி கண் விழிப்பது. மார்ச் மாதம் 1-ஆம் தேதி காலை விரதத்தை தொடங்கி விட்டீர்களா? நீங்கள் தூங்கவே கூடாது. மார்ச் மாதம் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு அதன் பின்புதான் உங்களுடைய தூக்கத்தை தொடர வேண்டும். இதுவே கண் விழிக்கும் சரியான முறை. (இரவு கண் விழிக்கும்போது சிவபெருமானை நினைத்து சிவபுராணம், தேவாரம்,… Read More

மாசி மகம்-17-02-2022

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். Read More

ரதசப்தமி – 08-02-2022

இந்த உலகில் தோன்றிய ஆதி வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.நாம் செய்யும் செயல்கள் மட்டுமல்ல செய்யாத செயல்களும் நமக்குப் பாவங்களையும் புண்ணியங்களையும் ஏற்படுத்தும் என்கின்றன சாஸ்திரங்கள். ஒவ்வொரு யுகத்திலும் முக்தியை அடைய மாறுபட்ட வழிகள் வகுக்கப்பட்டிருந்தன என்கிறது விஷ்ணுபுராணம்.ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன. சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் ஏழு வண்ணங்களே ஏழு குதிரைகளாகச் சுட்டப்படுகின்றன. பீஷ்மரை வியாசர் எருக்கம் இலை கொண்டு அலங்கரித்த தினம் ரதசப்தமி. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும். Read More

இன்று – சங்கராஷ்டமி

சங்கராஷ்டமியில் (27/12/2021) பைரவருக்கும், சிவபெருமானுக்கும் நாம் செய்யும் பூஜைகள் இரட்டிப்பான பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். இன்று ராகு கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரையும், பைரவரையும் வணங்கி வந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் அத்தனையும் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று திங்கட்கிழமை காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரையிலான காலகட்டம் ராகு காலம் உள்ளது. Read More

இன்று -06-10-2021

வணக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகத்துவம் கொண்ட புதன்கிழமை அன்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினம் வருகின்றது. இந்த அற்புதம் வாய்ந்த நாளில் எல்லோரும் தங்களுடைய முன்னோர்களை நினைத்து, கட்டாயம் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடிய விஷயம். வாழ்க வளமுடன்! நலமுடன்! Read More

இன்று – 10-09-2021

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே...! ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்...! Read More

இன்று -08-08-2021

வணக்கம். இன்று அமாவாசை, ஆடி அமாவாசை என்பது ஒரு சிறப்பு என்றால், அதிலும் மற்றொரு சிறப்பு ஆடி அமாவாசை குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் சேர்ந்து வருகின்றது. இன்று கொடுக்கப்படும் தர்ப்பணம், 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விடவேண்டும். இன்று அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கோடான கோடி புண்ணியத்தை நம்முடைய குடும்பத்திற்கு சேர்க்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இன்றைய அமாவாசை வழிபாட்டை யாரும் தவறவிடாதீர்கள். அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளை நாம் மறந்தால், முன்னோர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ? Read More

தைஅமாவாசை – 11-02-2021

மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். Read More Read More

பங்குனி உத்திரம் – 06.04.2020

வணக்கம். நண்பர்களே!! இன்று பங்குனி உத்திரம். நமது சைவ சமயத்தில் மிக முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம். மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். சந்திரன், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் பங்குனி உத்திரமாகும். திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் தெய்வானையை மணந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். திருச்சிற்றம்பலம் Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.