திருவாதிரைக் களி
தேவையான பொருள்கள்: பச்சரிசி – 2 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் வெல்லம் – 3 கப்* தேங்காய் – 1 மூடி (பெரியது) தண்ணீர் – 9 கப் நெய் – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி செய்முறை: பச்சரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுத்து ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, அரைத்துவைத்துள்ள அரிசி, பருப்புப் பொடிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும். நன்றாக சேர்ந்து வந்ததும் குக்கரில் 6,7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் களியுடன் சேர்க்கவும். அரிசி பருப்பை ரவை மாதிரி அரைத்து மாவில்லாமல் சலித்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கிளறும்போது கட்டிதட்டிக் கொள்ளும். Read More