X

Information

காலை வணக்கம் – இன்று 25பங்குனி

அன்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள். "போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்" −ஔவை "இப்பிறவியில் அடுத்தவரைக் குறைகூறி இன்பம் காண்பவன்,மறுபிறவியில் மீளமுடியாத வறுமையில் வாழ்வான்" உடல்நல குறிப்பு ஆப்பிள் மூலம் உடலை சுத்தபடுத்துவது பற்றி : ஒவ்வொருவரும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்கு மாதம் ஒருமுறையாவது உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் தற்போது ஜங்க் உணவுகளை உட்கொள்வதால், உடலின் மூலை முடுக்குகளில் டாக்ஸின்கள் தேங்கி, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். குறிப்பாக செரிமான மண்டலத்தைப் பாதித்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். ஆகவே இப்பிரச்சனைகளைத் தடுக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் டயட்டை மாதத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், உடல் முழுமையாக சுத்தமாகி, உடலியக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். காலை முதல் இரவு முழுவதும் அளவாக ஆப்பிள் மட்டும் உணவாக உட்கொள்ள வேண்டும். இன்றைய செய்தி பாலின விகிதம் நாட்டில்… Read More

இணையவலை துணுக்குகள்

வெள்ளிக்கிழமை கூகுள் தனது நீண்ட கால இணையத்தள முகவரி குறுக்குதல் சேவையை(URL shortening service) goo.gl ஐ மூட திட்டமிட்டுள்ளது. சேவை இன்னும் செயலில் உள்ளது, ஆனால் ஏப்ரல் 18 தொடங்கி, ஏற்கனவே இருக்கும் பதிவு செய்த பயனர்கள் தங்கள் goo.gl கணக்கின் பணியகத்தின் மூலம் இணைப்புகளைக் குறைக்க முடியும் என்று கூகிள் கூறுகிறது. பதிவு செய்த பயனர்கள் இணையத்தள முகவரி(URL) பகுப்பாய்வுத் தரவைப் (analytics data) பார்க்க முடியும் மற்றும் கூகிள் நல்ல சேவையை மூட திட்டமிட்டுள்ள நிலையில், மார்ச் 30, 2019 வரையில், CSV வடிவமைப்பில் உள்ள குறுகிய இணைப்பு தகவலைப் பதிவிறக்க முடியும். இதேபோல், மே 30, 2018 வரை டெவலப்பர்கள் goo.gl API க்காக பதிவு செய்ய முடியும் மற்றும் மார்ச் 30, 2019 அதே தேதி வரை API ஐ தொடர்ந்து பயன்படுத்துவார்கள். கூகிள் தனது Firebase Dynamic Links (FDL) சேவை ஆதரவக… Read More

உலக இட்லி தினம்

உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும். இட்லி குழந்தை முதல் பெரியர்வர்கள் வரை ஆரோக்கியமான உணவு. அதை பெருமை படுத்தும்விதமாக இன்று 30 மார்ச் உலக இட்லி தினம் கொண்டாடபடுகிறது இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. ஆவியில் வேக வைத்து உணவு தயாரிக்கும் முறை தமிழர்களிடம் இருந்துதான் மற்றவர்களுக்குப் பரவியதாக அறிய முடிகிறது Read More

இன்று-20Mar

சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness) மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. கடந்த, 2016 ம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 118 வது இடத்தில் உள்ளது. சர்வதேச ஜோதிட தினம் (International Astrology Day) சர்வதேச ஜோதிடம் நாள் / கொண்டாடப்படுகிறது வடக்கு உத்தராயண உண்மையில் ஏற்படும் சரியான நாள் பொறுத்து அனுசரிக்கப்பட்டது. இது மார்ச் 20-21 அல்லது மார்ச் 21 அன்று பொதுவாக மார்ச் 19-22 க்கு இடையில் ஆண்டுக்கு மாறுபடும். இது மத்தியப்பகுதி,கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவி தினம் (World Sparrow Day) பறவை இனங்களில் மிகச் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும்… Read More

இன்று – 08Mar18

உலக சிறுநீரக தினம் சிறுநீரகத்தின் பணிகள்: தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை செய்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமான உப்புகல்ளையும், தாதுக்களையும் பிரிக்கிறது. எரித்ரோபயிண்டிங் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இரத்தத்தின் கார, அமில தன்மையை நிர்வகிக்கிறது. ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2–வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மகளிர் தினம் உலகெங்கும் முக்கியத்துவம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள். Read More

இந்திய தேசிய அறிவியல் தினம்

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன்(சந்திரசேகர வெங்கடராமன்) தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. சி.வி.ராமன், ‘ராமன் விளைவை' கண்டறிந்த தினம். இதுவே இந்தியாவின் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. திருவானைக்காவலில் பிறந்த இவர், படிப்பில் பயங்கர சுட்டி. அப்போதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த இவர், இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார். பிறகு, இணைப் பேராசிரியராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருக்கிறபொழுது ஹவுராவில் எளிய பொருட்களை… Read More

உலக தாய்மொழி தினம்

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் இன்று பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது. "ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை… Read More

மகா சிவராத்திரி

வணக்கம். இன்று(13-Feb-2018) மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம். விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. மகா சிவராத்திரி விரதம் Read More

மந்திரங்கள் – 4

முருகன் மந்திரம் “ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ” [செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பின் 6 முதல் 7 மணிக்குள்ளாக பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து பின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.] காயத்ரீ மந்திரம் ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் ஓம் நமோ பகவதே சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய பக்த பரிபாலனாயா தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா!… Read More

தைப்பூசம்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சஷ்டி கவசம், சண்முக கவசம்,திருப்புகழ் போன்ற முருகனருள் பெற உதவும் பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம் . தைப்பூசத்தில் மாலை நேரத்தில் பழனி கோயிலில் தேரோட்டம் நடைபெறும், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.