X

Information

கோவில் மணி

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. Read More Read More

சித்திரை விஷு

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். சித்திரை பிறப்பு என்ற தமிழ் வருட பிறப்பு14-ஏப்ரல் அன்று வருகிறது.  தமிழ் மாதங்களில் முதலாமவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய். சித்திரை திங்கள் பிறப்பை ஒட்டியே நாட்டின் மற்ற மாநிலங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் அமைகின்றன. வட இந்தியாவில் பைசாகி என்றும், கேரளாவில் விஷு என்றும், ஆந்திராவில் யுகாதி என்றும் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை பிறப்புக்கு இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும், அவறை பொய்ப்பிக்கும் வகையில் தமிழர்கள் இப்பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். Read More Read More

பங்குனி உத்திரமும் குலதெய்வ வழிபாடும்

வணக்கம் நண்பர்களே!! குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது - இதெல்லாம் கிராமத்தில் பேசப்படும் பழமொழிகள். இவை குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குல தெய்வங்கள் என்பவை வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள் அல்ல; அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ, நமக்கு நினைவுறுத்த, பெரியவர்கள் குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். குல தெய்வங்களாக சிறு தெய்வங்களே பெருமளவில் விளங்குகின்றன.Read More Read More

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலையின் மருத்துவ குணங்கள் வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன் றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் இவை:Read More Read More

பங்குனி உத்திரம்

பால் போலவே வான் மீதிலே...: சந்திரன் பௌர்ணமிநாளில் கூட சிறு களங்கத்துடன்தான் ஒளிதருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து,  கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பௌர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது. Read More Read More

சனிப் பிரதோஷம்

சனிப் பிரதோஷம் ? பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ? எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பு வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும். ? இப்படி சிறப்பு வாய்ந்த எதிர்வரும் சனி பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி. இந்த காலக்கட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். மாலை வேளையில்… Read More

உலக சுகாதார தினம்

'உலக சுகாதார தினம்' 1950 முதல் ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் ( World Health Organization) ஆதரவில் கொண்டாடப்படுகிறது.Read More Read More

யூட்யூபின் அதிரடி!

தற்போது காணொளிகளுக்குக் கிடைக்கும் அபிரிமிதமான வரவேற்பை கருத்தில் கொண்டு கூகுள் YouTube Go என்ற புதிய செயலியை தற்போது இந்தியாக்கு (மட்டும்) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் சோதனை (Beta) பதிப்பில் உள்ளது. இதுவும் வழக்கமான YouTube செயலி (App) போன்றதே ஆனால், தரவிறக்கம் செய்து Offline ல் பார்ப்பவர்களுக்கு எளிதானது, வசதியானது. இலவசமாக இணைப்பு கிடைக்கும் போது நமக்கு விருப்பமான காணொளிகளை இந்தச் செயலியின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டு பின்னர் நமக்கு நேரம் இருக்கும் போது பார்க்கலாம். குழப்பமில்லாத எளிமையான முறை. இந்த பீட்டா வெர்சனை பரிசோதனை முயற்சியாக யூடியூப் தற்போது வெளியிட்டுள்ளது. டெஸ்ட்டர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் யூடியூப் தனது அப்ளிகேஷனில் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவரும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் போது கூகுள் அக்கவுன்ட் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை அளித்த பின்னரே லாகின் செய்ய முடிகிறது.Read More Read More

திருவெண்பா – மழை வேண்டல் பாடல்

மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பா - மழை வேண்டல் பாடல் பாடல் எண் : 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்‬: இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த… Read More

நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி

நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜூஸ் தயாரிக்கும் முறை: 1 டீஸ்பூன் வெந்தய பொடியை,3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் நன்மை #1 இந்த பானத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தியைக் கொண்டதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். #2 எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த பானத்தைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த ஜூஸ் உடலால் புரோட்டீனை உறிஞ்சும் அளவை அதிகரிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடை குறைய உதவி புரியும். #3 இந்த பானத்தில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இவை இதய தசைகளின் வலிமையை அதிகரித்து, இதய நோய்களின்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.