X

Information

அழகு குறிப்புகள்

திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும். இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச் முட்டைக் கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு ஈஸ்ட், ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகத்தில் தடவி பேக் போடவும். 20… Read More

அறிவோம் வெற்றிலை

நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு. மரத்தின் மீது ஏறி படரும் கொடியான வெற்றிலையை அகத்திக்கீரையோடு ஊடு பயிராகப் பயிரிடுவது நம்மவர்களின் வழக்கம். வெற்றிலையின் தாவரப்பெயர் Piper betle என்பதாகும். ஆங்கிலத்தில் Betel pepper என்பர். தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியில் பல்வேறு பெயர்களை வெற்றிலை பெற்றுள்ளது. தமிழில் வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு பொருளின் பெயரிலேயே அதன் தன்மையைப் பொதிந்து வைப்பது தமிழர்கள் வழக்கம். அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தத்தக்க சிறந்த மூலிகை யான வெற்றிலைக்கும் சுவாரஸ்யமான காரணத்தால்தான் பெயர் வைத்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும். எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு… Read More

அறிவோம் புடலங்காய்

கொடிவகையை சேர்ந்த புடலின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும். தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. இதில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உண்டு. கொத்துப்புடல், நாய்ப்புடல் குத்துச்செடியாக வளரும். பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் புடலின் காயைப் போலன்றி நீளம் குறுகியதாயிருக்கும் பேய்புடல் மிகவும் கசப்புடையது, ஆதலால் இதை எவரும் சாப்பிடுவதில்லை. புடலை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுபொருமலை போக்கும். வயிற்று பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவகுணமுடையது என்றாலும் நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான். புடலங்காயை நமது முன்னோர்கள் நீண்டகாலமாக உணவாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் சிறப்பு என்ன தெரியுமா? புடல் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகின்றனர். புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். பிஞ்சுகாயை மட்டுமே பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக  செய்து தொடா்ந்து 12… Read More

சோளப் பணியாரம்

தேவையானவை: சோளம் – ஒரு கோப்பை, உளுந்து – கால் கோப்பை, வெந்தயம் – சிறிதளவு, சின்ன வெங்காயம் – ஒரு கையளவு, பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப, கல் உப்பு – ருசிக்கேற்ப. செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம். மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம். பலன்கள்: உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. ‘என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன்,… Read More

நிலக்கடலைத் துவையல்

தேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை – 250 கிராம், பூண்டு – 10 பல், புளி – சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் – தலா இரண்டு, உப்பு – சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும். பலன்கள்: இதில் நல்ல கொழுப்பு, புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். Read More

சோள தோசை

தேவையானவை: சோளம் – 500 கிராம், உளுந்து – 100 கிராம், வெந்தயம் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும். பலன்கள்:- ”பஞ்சம் தங்கிய உணவு” என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. Read More

சிறுதானிய தோசை

செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 தேக்கரண்டி அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்! பலன்கள்: கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள இரத்தக் கொழுப்பைக் (கொலஸ்ட்ராலை) கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெல்லம் / கருப்பட்டி யின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக்… Read More

தானிய வடை

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த பொருத்தம். Read More

கோடை வெயிலை சமாளிக்க

கோடை ஆரம்பமானதிலிருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். உஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. ஆக வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது கோடை காலத்தில் வெயிலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு… Read More

குடிநீர்ப் பிரிச்சினையைத் தீர்க்கும் அதிசயப்பொருள்

கடல்நீரைக் குடிநீராக்குவதில் `கிராபின்` வடிகட்டி பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிராபின், உருக்கைவிட வலிமையானது, அதிகபட்ச நெகிழ்வுத்தன்மை உடையது, மிக மெல்லியதும் கூட. கிராபின் வடிகட்டியைப் பயன்பாடுத்துவதால் செலவு குறைவு என்பதோடு, சுற்றுசூழலுக்கும் பாதிப்பில்லை என்று விஞ்ஞானிககள் கூறுகின்தறனர், இங்கிலாந்து விஞ்ஞானிககள் உருவாக்கியுள்ள இந்த கிராபின் வடிகட்டி, கோடிக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவையை , குறைந்த செலவில், சுற்றுசூழலுக்கும் பாதிப்பின்றி தீர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராபின் ஒரே அணுவின் தடிமன் அளவுக்கு மிக மெல்லிய தகடாக மாற்றலாம். அதனாலேயே இது ஓர் அதிசயப்பொருள் எனப்படுகிறது. கிராபின் வடிக்கட்டி கடல் நீரில் உள்ள உப்பை 100 சதவீதம் பிரித்துஎடுத்து சுத்தமான குடிநீர் தரக்கூடியது. `உலக அளவில் பல லட்சம் பேருக்கு குடிநீரை கொடுப்பது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமாகும். இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் இதை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம்` என்கிறார், இந்த ஆய்வை… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.