X

Information

மலர்கள் சூடுவது மற்றும் நன்மைகள்

மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை பூ மட்டும் தான் உன்ன உகந்தது என எண்ணி வருகிறோம். ஆனால், பெண்கள் தலையில் சூடும் சில பூக்களும் கூட உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றது..  பூ சூடுவது என்பது ஒரு பாரம்பரியமான பழக்கம். இதை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்று இருக்கிறார்கள். ஆரோக்கியமான பழக்கம் இது.தினமும் பூ பறிப்பது ஒரு நல்ல அனுபவம். பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். அல்லது பூ பறிக்க கற்று கொள்வது பொறுமையை வளர்க்கும். பொறுமைக்கு பூமா தேவியை உதாரணமாக சொல்வர். பூவை பறிப்பவர்களிடத்தில் சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. Read More Read More

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம்… Read More

பிராணாயாமம்

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்! எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும். இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று… Read More

கேரட் மில்க் ஷேக்

கேரட் மில்க் ஷேக்கை இருவையாக செய்யலாம். முதல் முறை ஒரு குவளை கேரட் துருவல் அதே அளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து, சிறுது ஏலக்காய் தேவையான அளவு நீர் மற்றும் சக்கரை சேர்த்தால் கேரட் மில்க் ஷேக் தயார். இரண்டாவது முறை ஒரு குவளை கேரட் துருவலை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். நன்கு உறிய பாதம் பருப்பை தோலை நீக்கி வைத்து கொள்ளவும். இப்பொழுது இரண்டுடன் சிறுது பாலை சேர்த்து விழுது போல அரைத்து அதனுடன் சிறிது வெண்ணிலா, சர்க்கரை மற்றும் தேவையான அளவு பால் கலந்தால் கேரட் மில்க் ஷேக் ரெடி. Nutrition Facts Calories 60 Sodium 310 mg Total Fat 2 g Potassium 0 mg Saturated 0 g Total Carbs 3 g Polyunsaturated 0 g Dietary Fiber 0 g Monounsaturated… Read More

மாம்பழ லட்டு

தேவையானப் பொருட்கள் மாம்பழ கூழ் - 1/2 கப் சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப் தேங்காய் பவுடர் - 1 கப் ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் நட்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது… Read More

அறிவோம் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும். அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு… Read More

சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சித்திரத்திலிருந்து சித்திர… Read More

அறிவோம் கற்பூரவல்லி

ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லியின் மற்றொரு பெயர் ஒமவல்லி.பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமன ஆவியாகும் தன்மையுடைய நறுமண‌ எண்ணெய் இந்த… Read More

அறிவோம் தொட்டா சிணுங்கி

தொட்டாற்சுருங்கி முழுத்தாவரம் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையும் கொண்டது. தொட்டாற்சுருங்கி பரந்து விரிந்த வளரியல்பு கொண்ட சிறுகொடி வகைத் தாவரம். தாவரம் முழுவதும் சிறு முட்கள் காணப்படும். இவை, நேராகவோ, வளைந்தோ இருக்கும். இலைகள், சிறகு வடிவமாக கூட்டிலையானவை. தொட்டால் வாடிவிடும் இதன் இலைகளின் சிறப்பான அமைப்பாலேயே இது தொட்டாற்சுருங்கி என்கிற பெயர் பெற்றது. தொட்டா சிணுங்கி செடியின் இலையை தொட்டவுடன் அது உடனே மூடிக்கொள்ளும், கொஞ்ச நேரம் கழித்து தானாக திறந்து கொள்ளும். அதை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த செயல் தொட்டா சிணுங்கி தாவரத்தின் தனி சிறப்பாகும். இதற்கு காரணம் தான் என்ன? இச்செயலுக்கு காரணம், இத்தாவரத்தில் இருக்கும் இரண்டு மிக முக்கிய வேதிப்பொருளாகும், அவை மிமோபுதின் (Mimopudine) பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate) மிமோபுதின் (Mimopudine) என்ற வேதிப்பொருள் இலையை திறப்பதற்கும், பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate) என்ற வேதிப்பொருள் இலையை மூடுவதற்கும்… Read More

அறிவோம் மாதுளம் பழம்

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் நமக்கு கிடைக்கின்றன. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடலுக்கு ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும். மாதுளம் பழத்தில் யுரோலித்தின் ஏ என்ற பொருள், நம் உடலில் செல் சுத்திகரிப்பு மையமான மைட்டோகாண்ட்ரியாவில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தச் செய்கின்றன. இதன்மூலமாக, உடலில் உள்ள செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஆற்றலுடன் செயல்பட முடிகிறது. மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தச் சோகையைத் தடுக்க உதவுகிறது. மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்துக்கு நல்லது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் சுரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.