X

Information

இந்திய பொறியாளர்கள் தினம்

இந்தியாவில், Sir பட்டம் பெற்ற பாரத ரத்னா விருது வென்ற இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான, Sir MV என்று பரவலாக அறியப்பட்ட ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15’ஐ ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ 1860ம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் தன் 12ம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பள்ளி படிப்பை சிக்கபல்லாபுராவிலும், இளங்கலை பட்டத்தை செண்டரல் காலேஜ், பெங்களூரிலும் முடித்தார். பின் கட்டிட பொறியியல் (civil engineering) படிப்பை புகழ்பெற்ற பூனே பொறியியல் கல்லூரியில் பயின்றார். ஆரம்பத்தில் மும்பை பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசன கமிஷனில் பணியை தொடர அழைக்கப்பட்டார். இந்திய நீர்ப்பாசன துறையில் வேலை பார்த்த காலத்தில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பை தக்காணப் பீடபூமி பகுதியில் செயல்படுத்தினார். இவரின் புகழுக்கு உச்சமாக கருதப்படுவது தெலுங்கானா ஹைதராபாத் நகரில் வெள்ளப்… Read More

சர்வதேச மக்களாட்சி தினம்

மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். மக்களாட்சியின் பண்புகள் ஜனநாயகத்தில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.. இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.. மக்களாட்சியின் கோட்பாடுகள் ஜனநாயகத்திற்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது:… Read More

அவல் போண்டா

தேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் (பொடி செய்தது) வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப் கடலை மாவு – கால் கப் உப்பு – தேவைகேற்ப பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – மூன்று (பொடியாக நறுக்கியது) கரிவேபில்லை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். Read More

பன்னீர் கோபி கோஃப்தா

தேவையான பொருட்கள் காளிஃப்ளவர் – கால் கப் (முக்கால் வேக்காடு வேகவைத்தது) உருளைக்கிழங்கு – கால் கப் (வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் மிளகு தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப பன்னீர் – கால் கப் (பொடியாக நறுக்கியது) மைதா மாவு – சிறிதளவு க்ரேவி செய்ய: எண்ணெய் – தேவையான அளவு தக்காளி விழுது – அரை கப் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் ப்ரெஷ் க்ரீம் – இரண்டு டீஸ்பூன் பால் – அரை டம்ளர் (காய்ச்சிய பால்) கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் வேகவைத்த காளிஃபிளவர், வேகவைத்த உருளைக்கிழங்கு,… Read More

சர்வதேச எழுத்தறிவு தினம்

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966 முதல் செப்., 8ல், சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதற்கேற்ப 'டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு' என்பதே இந்தாண்டு  மையக்கருத்து. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்… Read More

47 வகை நீர்நிலைகள்

வணக்கம். அன்பர்களே!! நம்முடைய பழங்காலத் தமிழர் வரலாற்றில் உள்ள 47 வகையான நீர்நிலைகள் பற்றியது. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட நீர் அரண் அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு ஆறு -(River) - பெருகி ஓடும் நதி இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருநது நீர் ஊறுவது ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம் ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர் கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில்… Read More

பித்ரு பட்சம்

பித்ரு பட்சம் அல்லது பித்ர் பக்ஷம் அல்லது பித்ரி பக்க்ஷா, (வடமொழியில் "முன்னோர்களின் பதினாறு நாட்கள்" எனப் பொருள்படும்) இந்த 16–சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது. "மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும்… Read More

பருத்திப்பால்

வணக்கம் நண்பர்களே!! நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். தாய்ப்பாலிற்கு அடுத்த நிலையில் மாட்டுப் பால் என்ற நிலையில் அதில் மனித உடலுக்குத் தேவைக்கு மிகுதியாக கொழுப்பு இருக்கிறது. அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைப் பதப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் நம்மைக் குழப்பத்தில் உள்ளாக்கி இருக்கிறது இந்தச் சமூகமும் அறிவியலும். அன்றைய காலச் சூழ்நிலையில் பச்சைப் புல், எண்ணெய் எடுத்த நிலக்கடலை, புண்ணாக்கு போன்றவற்றை மாட்டுக்கு கொடுத்து வந்தனர். அதன்மூலம் நல்ல, அடர்த்தியான பாலையும் கறந்தனர். மாட்டிற்காக தம் நிலத்தில் விளையும் பருத்தியை அறுவடை செய்து பஞ்சு, கொட்டை என தனியாக பிரித்து அந்தக் கொட்டையை ஊற வைத்து ஆட்டிப் பாலெடுத்து மாட்டடுக்குக் கொடுத்தனர். அவ்வாறாக செய்யும்போது மாடு நன்றாக பால் கறக்கும். இதை ”பருத்திப் பால் உண்ட பசு… Read More

இந்திய தேசிய விளையாட்டு தினம்

உலக அரங்கில், இந்தியா, ஹாக்கி போட்டியில் தனிச் சிறப்புடன் விளங்கியதற்கு தயான் சந்த் காரணம் ஆவார். இவர், கடந்த, 1905ம் ஆண்டு, ஆக., 29ல், உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தயான் சந்த், தனது தந்தையின் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அவரும் பயிற்சியில் ஈடுபட்டார்.தனது, 16-வயதில், தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவ இருந்த நிலையில், களமிறங்கிய சந்த், நான்கு கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக… Read More

குரு(வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் தீர

வணக்கம் அன்பர்களே!! தற்போது நீங்கள் செய்தி தாள்களில் பார்த்திருப்பீர்கள் குருபெயர்ச்சி பற்றி. இங்கு நான் படித்த குருபகவான் தெடர்பான பிரச்சினை தீர சில. குரு மூல மந்திர ஜபம்: "ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ" 40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும். குரு ஸ்தோத்திரம் தேவானாம் ரிஷஷீணாம் குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!! தமிழில் குணமிகு வியாழக் குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்! பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!! குரு காயத்ரி மந்திரம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி| தந்நோ குரு: ப்ரசோதயாத் குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். குரு பகவான் தியான மந்திரம் தப்த காஞ்சன வர்ணாபம் சதுர் புஜ சமந் விதாம் தண்டாகஷ சூத்ர ஹஸ்தம் கமண்டலு வரான்விதாம்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.