X

Information

உலக ரேபிஸ் தினம்

ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என… Read More

பசுமை நுகர்வோர் தினம்

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.  மேற்கத்திய சமூகங்களில், 60 களில் மற்றும் 70 களின் முற்பகுதியில், சுற்றுச்சூழலையும் மக்களுடைய சுகாதாரத்தையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை தொழில்துறை மாசுபடுத்தல்களால் ஏற்பட்டுள்ள விளைவுகள் மற்றும் பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சியால் நுகர்வு இந்த புதிய யோசனை உருவாக்கப்பட்டது. 1980 களில் முதல் அமெரிக்க "பசுமை" பிராண்டுகள் அமெரிக்க சந்தையில் தோன்றி, வெடித்தன. 1990 களில் பசுமை உற்பத்திகள் மெதுவான மிதமான வளர்ச்சியைக் கொண்டிருந்தது, இது ஒரு முக்கிய நிகழ்வு. பசுமை பொருட்களில் அமெரிக்க ஆர்வம். 2000 களின் முற்பகுதியில் அதிக வேகத்துடன் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது மற்றும்… Read More

பாராட்டு எனும் மந்திரம்

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.  யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா? குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான்… Read More

பணம் சார்ந்த பழமொழிகள் / அனுபவ மொழிகள்

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு. ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு. உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான். பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான். உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற! அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும். செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது. செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும். ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான். லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே ! ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம். முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம். (படித்ததில் பிடித்தது) Read More

பூக்களின் ஏழு பருவங்கள்

ஒரு பூவானது நிஜத்தில் பல பரிணாமங்களை கொண்டது. ஆனால் நாம் அதை எளிதாக பூ அல்லது மலர் என சொல்லி விடுகிறோம். ஒரு பூவின் முதல் நிலை அரும்பு. அதாவது பூக்கும் செடி கொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு நிலையை அடையும். அரும்பின் மூன்று நிலைகள் நனை, முகை, மொக்குள் என்பவையாகும். அதை தொடர்ந்து இரண்டாம் நிலையான மொக்கு விடும் நிலை. இது அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை. அடுத்து மூன்றாம் நிலையான மொட்டு, முகிழ்க்கும் நிலையான முகை. இதையே நறுமுகையே என பல கவிகளும் பாடுகின்றனர். அதைத் தொடர்ந்து நான்காம் நிலையான,மலரும் நிலை.அதாவது மலர். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த, மிக எளிமையாய் காணக்கிடைக்கும் பூக்களின் நிலை. மேல் சொன்ன மூன்று நிலைகளும் பொதுவாக பூக்களை விரும்பி வளர்ப்பவர்களே பொதுவாக கண்டு அறிந்திருக்கும்… Read More

ஆற்றல் சக்கரங்களும் தமிழ் மொழியும்

நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே தனது மொழியாக்கியவர்கள் தமிழர்கள். பல்வேறுவிதமான நோய்களுக்குத் தமிழ் மொழியே மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் நம் பிணிகளைப் போக்கும் மாத்திரைகள் போன்று செயல்படுகின்றன என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். 1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.… Read More

கூகுளின் ‘தேஜ்’

நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனைவருக்கும் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப, இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் யூபிஐ சேவையில் இணைந்து 2017 செப்டம்பர் 18 முதல் கூகுள் புதிதாகத் துவங்கியுள்ள சேவையே 'தேஜ்' ஆகும். கூகுள் தேஜ் செயலியில் தற்போது உள்ள அம்சங்கள், யூபிஐ உதவியுடன் வங்கி கணக்கை தேஜ் செயலியில் இணைப்பதன் மூலம் உடனடியாக, நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பலாம். இதற்கு அவர்களது வங்கி கணக்கில் யூபிஐ சேவை இருக்க வேண்டும், அவர்களின் யூபிஐ ஐடி உங்களிடம் இருக்க வேண்டும். தேஜ் செயலி கூகுள் நிறுவனத்தில் நேரடி 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும். இதனால் மோசடிகள், ஹேக்கிங் போன்றவற்றைச் செய்ய முடியாது. யூபிஐ பின் மட்டும் இல்லாமல் கூகுள் பின் அல்லது கைவிரல்ரேகை அளித்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய முடியும். இந்தியாவில் ஏதேனும் வங்கிகளில் கணக்கு, இந்திய மொபைல் எண் உள்ளிட்டவை தேவை… Read More

மகாளய அமாவாசை

ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம்… Read More

சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்

வணக்கம். நம்முடைய திருவள்ளுவர் மழை மற்றும் நீர் பற்றிய குறள். "வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று." Translation: The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives. "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு." Translation: When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'. மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு. தண்ணீர் இயற்கை நமக்கு வழங்கிய மிகப்பெரிய… Read More

மந்திரம் ஓம்

ஓம் மந்திரத்தை பற்றிய பதிவு!! பத்மாசனத்தில் அமர்ந்து இடது கைப்பெருவிரலால் இடது மூக்கை மூடி வலது நாசியால் மூச்சை உள்ளிழுத்து இடது கை மோதிர விரல் கொண்டு வலது நாசியை மூடி இடது நாசியால் மூச்சை வெளிவிடுவது என்பதை மூச்சு பயிற்சி என்கிறோம். இதில் மூச்சை உள்ளிழுப்பதை பூரகம் என்பார்கள். வெளிவிடுவதை ரேசகம் என்பார்கள். நன்றாக மூச்சு பயிற்சியை கற்றவர்கள் அதன் அடுத்த படியான மூச்சை உள்ளுக்குள் அடக்கி நிறுத்தி வெளிவிடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். மூச்சை அடக்கும் நிகழ்வை கும்பகம் என்பார்கள். எடுத்த எடுப்பில் மூச்சை அடக்கி வெளிவிடுதல் உடலுக்கு மிகவும் கெடுதலான பலனை தரும் என்பார்கள். எனவே, சாதாரண வாழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றது ஓம் என்னும் தியான மூச்சு பயிற்சி. அதாவது, ஓம் என்ற ஒலி தான் இந்த மூச்சு பயிற்சியின் சூட்சுமம். மூச்சை முடிகிற வரை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு நன்றாக விரிந்து… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.