X

Common

இந்தியாவில் எஞ்சியுள்ள நாட்டு மாடுகள் இவைதான்!

முன்னர் இந்தியாவில் 130-க்கும் மேல் நாட்டு மாட்டு இனங்கள் இருந்திருக்கிறது. முன்னோர்கள் ஒவ்வொரு மாட்டு இன வகைகளையும் ஒவ்வொரு வேலைக்காகவும், தங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர். மாடுகளை வீட்டு விலங்காக பழக்கப்படுத்திய முதல்நாடும் இந்தியாதான். முக்கியமாக காளை இனங்களை காப்பதற்காக உருவாக்கிய வீரவிளையாட்டுதான் இந்த ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் காளைகளை கலந்துகொள்ளச் செய்து வருடத்தின் மற்ற நாட்களில் உழவு சார்ந்த தொழிலுக்காகவும், இன விருத்திக்காகவும் பயன்படுத்திக்கொண்டான் மனிதன். முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை… Read More

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள்

Traditional Games Read More

மந்திரம் மகிமை

இந்து மதத்தின் அடிப்படை வேதங்கள்தான். வேத மந்திரங்களின் சாரம் உபநிஷதங்கள். பிற்காலத்தில் இந்த புண்ணிய பூமியில் தோன்றிய எண்ணற்ற மகான்கள் நம்முடைய நல்வாழ்க்கைக்காக பல மந்திர சக்தி கொண்ட ஸ்லோகங்களை அருளி இருக்கின்றனர். இந்த மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவோ அல்லது பாராயணம் செய்யவோ வேண்டும். உச்சரிப்பு சிறிது பிசகினாலும், மந்திரங்களின் அர்த்தம் மாறி விபரிதமான பலன்களைத் தந்துவிடும். அதனால்தான், மந்திரங்களை தகுந்த குரு மூலமாக உபதேசம் பெற்று, உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவேண்டும். அப்போதுதான் அந்த மந்திரத்துக்கு உரிய பலனை நாம் பெற முடியும். இந்த தத்துவத்தை விளக்கும் வகையில் பகவான் ரமண மகரிஷி அருளிய ஒரு கதையை இங்கே பார்ப்போம். ஒரு அரசன் மாலை வேளையில் தனது மந்திரியைச் சந்திக்க விரும்பினான். மந்திரியின் வீட்டுக்குச் சொல்லி அனுப்பினான். காவலர்கள் சென்று அழைத்தும் மந்திரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காரணத்தைத் தெரிந்துகொள்ள நினைத்த அரசன், மந்திரியின் வீட்டுக்கே போனபோது, மந்திரி… Read More

பாரம்பர்ய காளை

'ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றார் போல விவசாயிகள் வீடு பசுக்களையும், பாரம்பர்ய காளைகளையும் வளர்த்து வந்தனர். பால் மோகம் அதிகமான காலகட்டத்துக்குப் பிறகு நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை குறைத்து வெளிநாட்டு கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இறைச்சித் தட்டுப்பாட்டை போக்கிக்கொள்ள தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து நான்கு வகையான நாட்டுக்காளைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில் ஓங்கோல், கிர் போன்ற நாட்டுகாளைகளும் அடக்கம். அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே, அமெரிக்கா, கொலம்பியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் முதன்முதலாய் இறக்குமதி செய்யப்பட்ட காளைகள் நமது காளைகள்தான். 1854 முதல் 1926 வரை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 266 காளைகள் மற்றும் 22 பசுக்களை கொண்டு கரு உருவாக்கப்பட்டது. இப்படி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பிறந்த காளைகளை பிரம்மன் அல்லது பிரம்மா… Read More

உங்கள் அருகில் இருப்பவர்களை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்? நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை. எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?… Read More

குழந்தையின் பிளஸ் பாயின்டைச் சொன்னால் அவர்களது தயக்கம் உடைக்கலாம்

ஓயாமல் வாயடிக்கும் டிவி, தொட்டால் சிலிர்க்கும் ஸ்மார்ட் போன், நகக் கண்களில் விரையும் தொடு திரை. இப்படி குழந்தைகளைச் சுற்றிலும் ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் பேசுவது மெல்லக் குறைந்து வருகிறது. அப்படியே பேசினாலும் குறுந்தகவல் பாஷை போல ஓரிரு வார்த்தைகளில் முடிந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த தயக்கம் அவர்களது வாழ்க்கை முழுவதும் தாழ்வு மனப்பான்மையாகப் படர்ந்து அவர்களது வளர்ச்சியை துவக்கத்திலேயே தடுக்கிறது. தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் குழந்தைகளால் தான் மிகப்பெரிய லட்சியங்களை எட்டித் தொட முடியும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நின்று கொண்டிருக்கும்., அவர்கள் முன்பு ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கான பதில் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியும் என்று சொல்ல ஏதாவது ஒரு சில குழந்தைகளே முன்வருகின்றன. அவர்களில் சிலரையும் யாராவது சொல்… Read More

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்!!

? நமக்கு சங்கடங்கள் வரும் போது முதலில் கடவுளைத்தான் நினைப்போம். மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. எனவே தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. அவ்வாறு கோவிலுக்கு தினமும் செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையை அமைத்து கடவுள் படங்களை வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை அறை எப்படி இருக்கவேண்டும் என பார்ப்போம். ? நம் வீட்டில் பூஜை அறையை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ? பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணங்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். ? பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில்… Read More

First Day in 2017

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு  - ( குறள் எண் : 1 ) இனிய புத்தாண்டு (2017) தின நல்வாழ்த்துக்கள் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில் கூடுதலாக ஜன.,1 ஒரு விநாடி சேர்க்கப்பட்டது. அணு கடிகாரம்: பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்ட கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டப்படும். தற்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில், டிச.,31ம் தேதி இரவு 11:59 மணி 59 விநாடிகள் ஆன போது கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு பிறந்தது. 'லீப் செகண்ட்': அணுகடிகாரத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்க, ஜன.,1 காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடியின்போது(05:29:59) கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டது. இந்த 'லீப் செகண்ட்' சேர்ப்பு, செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.