X

BBAuthor

இன்று-04.10.2019

வணக்கம். இன்று 4ம் தேதி அக்டோபர் மாதம்,சஷ்டி திதி,நவராத்திரி 6 ம் நாள், இன்றைய அம்மன் இந்திராணி, அம்மனுக்கு தேங்காய் சாதம் நைவேத்தியம், அம்மனுக்கு உகந்த நிறம் சிகப்பு, நவராத்திரி ராகம் நீலாம்பரி ராகம். நவராத்திரி ஸ்லோகம்:ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரா ஹஸ்தாய திமஹி தந்நோ இந்திராணி ப்ரசோதயாத் இன்றய சிந்தனை:"சிரிப்பு ஒரு சிறப்பான மருந்து" வரலாற்றில் இன்று: 1537 ம் ஆண்டு முதலாவது "Matthew Bible" ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டது. அதை William Tyndale and Miles Coverdale மொழி மாற்றம் செய்தார்கள். இன்றய படம் Read More

இன்று ஆவணி 31-17.09.2019

வணக்கம். இன்று ஆவணி 31ம் நாள். நாளை புரட்டாசி மாதம். இன்றய சிந்தனை "பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால் உன் இலக்கு தவறு சரியான இலக்கை தேர்ந்தெடு.." Read More

இன்று ஆடி வெள்ளி -19.07.2019

வணக்கம், இன்று ஆடி வெள்ளி 3ம் நாள். தெரியுமா உங்களுக்கு கூகிள் தனது மேப்பிள் பொது கழிப்பறை மற்றும் பைக் பகிர்வு வசதி இடங்கள் பற்றி தெரிவிக்கிறது. நெட்பிளிக்ஸ் கைபேசி வழி படம் பார்க்க குறைந்த கட்டணம் வசூலிக்கபோவதாக அறிவிக்க உள்ளது. “The colour fuchsia is named after a person, who gave the flower its name” Read More

இன்று ஆனி 23-08.07.2019

வணக்கம். இன்று ஆனி 23 ம் நாள் ஆனி உத்திர தரிசனம். தெரியுமா உங்களுக்கு நாம் இன்று தொழில்நுட்ப துறையில் மிகவும் அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இருந்தாலும் இன்றைய உலகில் கணனி யுகத்தில் சூப்பர் கணினிகளின் சக்தி நாட்டின் நாளைய வளர்ச்சியை தீர்மானிக்கிறது. இன்று உலகின் முக்கிய நாடுகளிடம் உள்ள சூப்பர் கணனிகளில் எண்ணிக்கை சீனா 219, அமெரிக்கா 116, இங்கிலாந்து 18, ஜப்பான் 29, பிரான்ஸ் 19, மற்றும் இந்தியா 3. உலகின் அதிவேக சூப்பர் கம்யூட்டர்களில் 43.8% சீனா தன் வசம் கொண்டுள்ளது. இதில் இந்தியா 0.6% மட்டும் பங்களிக்கிறது. சூப்பர் கம்யூட்டர்களின் வேகம் பீட்டாபிளாப் எனும் அளவினால் மதிப்பிடப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் டிரிலியன் கணினிப்புகள் செய்யக்கூடிய கணனி ஒரு பீட்டாபிளாப் திறன் ஆகும். இந்தியவிடம் 3 சூப்பர் கணனிகள் உள்ளன, அவை பிரதியூஸ் (வானியல் ஆய்வு மையம்) 4 பீட்டாபிளாப் செயல்திறன், மிகிர் (தேசிய தட்பவெப்ப… Read More

இன்று ஆனி 10-25.06.2019

இன்று ஆனி 10 ம் நாள் செவ்வாய் கிழமை தேய்பிறை அஷ்டமி(பகவதாஷ்டமி). நாம் எல்லாருக்கும் அஷ்டமி பற்றி தெரிந்து இருக்கும் . இன்னும் பல விஷயங்கள் உங்களுக்காக இதோ. அஷ்டமி வழிபாடு அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும்.   பைரவ வழிபாடு அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.  தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. அஷ்டமி நாளில் உச்சி வேளையில்… Read More

இன்று ஆனி 8ம் நாள்

வணக்கம்! இன்றைய தத்துவம்: " யாரையும் இழந்து விடாதீர்கள், இழப்பது எளிது.. பெறுவது கடினம்.. அது பொருளாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி …" ஞானிகள் சொன்ன குறிப்பு நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள்,படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி செடிகளுக்கு விட்டு விட வேண்டும். அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின்ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும். தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்… • சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம் • வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் •… Read More

இன்று வைகாசி 29 ம் நாள்

சாணக்கியரின் முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை இதோ உங்களுக்காக சில ஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா?. இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் தகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் எவரிடமும் ஒருபோதும் நட்பை வளர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களால் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி கிடைக்காது. ஒரு வேலையை தொடங்கிய பிறகு அது தோல்வியில் முடிந்துவிடும் என்று நினைத்து ஒருபோதும் பின்வாங்கி விடாதீர்கள். ஏனெனில் உண்மையாக உழைப்பவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆவர். Read More

இன்று – வைகாசி 22 ம் நாள்

வணக்கம்! இன்று வைகாசி 22 ம் நாள், திருவாதிரை நட்சத்திரம்; ரமலான் திருநாள். "மனிதன் ஆசைக்கு அளவு இல்லை, அதுபோல் அவனுடைய ஆற்றலுக்கு அளவு இல்லை" துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே ஆசைகளை நினைத்து வாழ்கையை இழக்காதே சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.