X

BBAuthor

ஆலய தரிசனம்

வணக்கம்!! நாம் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று வருவோம், இன்று நம் முன்னோர்கள் ஆலய தரிசன முறைகள் மற்றும் விதிகள் என்ன என்பதை நான் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை. கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.… Read More

Quotes

To keep the body in good health is a duty... otherwise we shall not be able to keep our mind strong and clear. - Buddha We all have two lives. The second one starts when we realize we only have one. - Tom Hiddleston Our lives begin to end the day we become silent about things that matter. - Martin Luther King Jr. Learn as if you were to live forever. - Mahatma Gandhi Anyone who stops learning is old, whether at twenty or eighty. Anyone who keeps learning stays young. The greatest thing in life is to keep your… Read More

சமையல் – வல்லாரை

வல்லாரை துவையல் தேவையான பொருட்கள் வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும். இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் எ,வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைந்துள்ளன. ரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலுள்ளது. வல்லாரை கீரை சாதம் தேவையான பொருட்கள் ஆய்ந்த வல்லாரை கீரை - 1 கப் உதிரியாக வடித்த சாதம் - 3 கப் அளவு பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் -… Read More

விரதம்

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்.. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது… Read More

உளுந்து டிப்ஸ்

சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நோயின் பாதிப்பு நீங்க கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம்… Read More

ஆசனமும் மாற்று ஆசனம்

எந்த ஒரு ஆசனமும் செய்த பின் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும்.அப்போது தான் முழு பலன் கிடைக்கும்..சில முக்கிய ஆசனங்களும் அவற்றுக்கான மாற்று ஆசனங்களும் இப்போது பார்க்கலாம்.. பத்மசனம் ..............சுகாசனம்(சாதாரணமாகஉட்காருதல்) யோகமுத்ரா ............புஜங்காசனம்,மச்சாசனம், பிறையாசனம். பச்சிமோத்தாசனம்.......சக்க்ராசனம்,தனூராசனம். விபரீதகரணி.................மச்சாசனம்,பிறையாசனம். சர்வாங்காசனம்..............மச்சாசனம்,பிறையாசனம், ஹலாசனம் ...................சக்கராசனம்,மச்சாசனம், பிறையாசனம்.பச்சி மோத்தாசனம். புஜங்காசனம்..................யோகமுத்ரா. சலபாசனம்.....................உத்தனபாதாசனம். தனூராசனம்...................ஹலாசனம்,பச்சிமோத்தாசனம். உசர்ட்டாசனம்.............சர்வாங்காசனம்,ஹலாசனம். மச்சாசனம்....................சர்வாங்காசனம்,பச்சிமோத்தாசனம். சிரசாசனம்......................நின்றபாத ஆசனம். பாத ஹஸ்தாசனம்.......ஹலாசனம்,சக்ராசனம், பிறையாசனம். சக்ராசனம்....................யோகமுத்ரா,ஹலாசனம். பிறையாசனம்.............பாதஹஸ்தாசனம், ஜானு சீராசனம்............பச்சிமோத்தாசனம். வஜ்ராசனம்.....................மகாமுத்ரா,யோகமுத்ரா. சுப்தவஜ்ராசனம்...........விபரீதகரணி,சர்வாங்காசனம். உட்டியானா...................நெளவ்லி. நெளவ்லி. ....................உட்டியானா Read More

பிராணாயாம வகை

சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும். பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும். நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும். பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது. நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல். பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல். சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல். மேல் உடலைத் தூய்மையாக்கும். மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல். கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல். Read More

சிந்தனை துளிகள்

இனிய காலை வணக்கம் நண்பர்களே! வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள். உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள். தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும். பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி! மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம். Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.