X

BBAuthor

உலக நகர திட்டமிடல் தினம்

திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம். அது போல ஒரு நகரம் உருவாகும் போதே, எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவ., 8ம் தேதி "உலக நகர திட்டமிடல் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது. ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய விரிவாக்கம், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பது, ஆக்கிரமிப்பு… Read More

உலக சிக்கன தினம்

ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும். சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம். "சிறுக கட்டி பெருக வாழ்" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும். சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது. 1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச… Read More

மாலை நேர ஸ்நாக்ஸ்

நட்ஸ் பால்ஸ் தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், வறுத்த எள் - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், ரஸ்க் - 6, பொடித்த வெல்லம் - 150 கிராம், பேரீச்சை - 6, முந்திரி - 8, உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நெய் - சிறிதளவு. செய்முறை: பேரீச்சையை பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டை களாகப் பிடித்து பரிமாறவும். நியூட்ரிஷியஸ் பேல் தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - அரை கப், முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப், பொரி - ஒன்றரை கப், ஆப்பிள் - ஒன்று, மாதுளை முத்துக்கள் - கால் கப்,… Read More

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாக கருதுகின்றனர். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது. சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான். கண்ணாடிக்கு அபிஷேகம் ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு… Read More

சிந்தனை குறிப்பு

வாழ்க்கை வளமாக்கும் சிந்தனை குறிப்பு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித்தருகின்றனர். உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதில் கவனம் மற்றும் நேரத்தை அதிகம் செலுத்துங்கள். அதிகாலை எழுந்திருக்க பழகுங்கள். வெற்றிபெற்ற பலரும் அதிகாலை எழுபவர்கள். படித்ததில் பிடித்தது!! தொடரும்... Read More

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பான நண்பர்களுக்கு, எனது உள்ளம் கனிந்த ? தீபாவளி?  நல்வாழ்த்துக்கள். Read More

உலக வறுமை ஒழிப்பு தினம்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக இந்நாள் 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் உலக ளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17-ஐ வறுமை ஒழிப்பு நாளாகஅதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம்… Read More

சர்வதேச உணவு தினம்

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "இடம்பெயர்வு எதிர்காலத்தை மாற்றவும். உணவு பாதுகாப்பு… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.