X

BBAuthor

கணித மேதை ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம் பிறந்த தினமின்று! இராமானுசன் அவர்களுக்கு கணிதத்தில் மிகுதியான ஆர்வமும், தனிச்சிறப்பு தன்மையும் இருந்தது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாக திகழ்ந்தார். இராமானுசன் அவர்களின் குறிப்பிடத்தக்க கணிதத் தேற்றங்களில் சில – ‘எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு’, ‘நீள்வளையச்சார்புகள்’,  ‘தொடரும் பின்னங்கள்’, மற்றும் ‘முடிவிலா தொடர்’. கணித மேதை அவரை பற்றி : அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை. அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம்… Read More

Quotes

"Once you replace negative thoughts with positive ones, you'll start having positive results." "Brave concept is "Do or Die" Practical concept is "Do before you Die" Winner's concept is "Don't Die, until you Do it"." யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள் ! ஏனெனில் அதில் வெற்றி பெற்றால் ஒரு எதிரியைப் பெறுவீர்கள் ! தோல்வியுற்றால் ஒரு நண்பனை இழப்பீர்கள் ! Read More

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். - திருக்குறள் (948) உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். - திருக்குறள் (949) Read More

Quotes

Health is the greatest gift, contentment the greatest wealth, faithfulness the best relationship. - Buddha Three things cannot be long hidden: the sun, the moon, and the truth. - Buddha Just as a candle cannot burn without fire, men cannot live without a spiritual life.- Buddha Read More

இஞ்சிப்பால்

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது. 4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.… Read More

உலகத் தொலைக்காட்சி தினம்

உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. தெரு முனைகளிலும், வீட்டு முற்றத்திலும் கூடி பேசியவர்களை வீட்டிற்குள் அமரவைத்தது தொலைக்காட்சி தொடர்கள். திரையரங்களுக்கு சென்று படங்கள் பார்ப்பது குறைந்தது. தொலைக்காட்சித் தொடர்களை பலர் விரும்பி பார்த்ததால் அதன் ஊடே விளம்பரம் செய்வது பலன் தரும் என்று கருதினர் விளம்பரதாரர்கள். மக்கள், திரைப்படத்தின் இன்னொரு வடிவமாகத் தொலைக்காட்சியை இப்போது கருதுகிறார்கள். 1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை… Read More

உலக சகிப்புத் தன்மை நாள்

உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது. வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்டிக் காத்துப் பேணுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு மிகவும் சிரமமான ஒன்றாகும். இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு… Read More

உலக நீரிழிவு நாள்

உலக நீரிழிவு நாள் (World Diabetes Day) உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் தான் இன்சுலின் கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே இன்றைய நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.