X

BBAuthor

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்​தை நிர்ணயிக்கும் ஆற்றல் ​பெற்றிருந்தனர். ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழி​கை, 31 வினாடி, 15 தர்ப்ப​ரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய வருடம் என்பது பூமி சூரிய​னைச் சுற்ற எடுத்துக் ​கொள்ளும் காலமாகும். சந்திர வருடம் என்பது சந்திர​னை அடிப்ப​​டையாகக் ​கொண்டது. இரண்டுக்கும் உள்ள ​வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும். 5 வருடத்திற்கு ஒரு மு​றை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவா​சை வரும். Read More Read More

பாதுகாப்பு இணைப்புகள்

பாதுகாப்பு இணைப்புகள்: மைக்ரோசாப்ட் ஏப்ரல் பேட்ச் செவ்வாய் பாதுகாப்பு புதுப்பிப்புகளை வெளியிட்டது, இது 66 பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், விண்டோஸ் கிராபிக்ஸ் உபகரணத்தில் (சி.வி.-2018-1010, -1012, -1013, -1015, -1016) எழுத்துரு நூலகம் மூலம் உட்பொதிக்கப்பட்ட எழுத்துருக்களின் முறையான கையாளுதல். English: Microsoft has released April Patch Tuesday security updates that address 66 vulnerabilities, includes the fix for five critical remote code execution vulnerabilities in Windows Graphics Component (CVE-2018-1010, -1012, -1013, -1015, -1016) that are related to improper handling of embedded fonts by the Font Library. அடோப் ஏப்ரல் செக்யூரிட்டி புல்லட்டின் ஃப்ளாஷ் பிளேயர், எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜர், இன்டெசின் சிசி, டிஜிட்டல் பதிப்புகள், கோல்ட்ப்யூஷன் மற்றும் ஃபோன்ஜாப் புஷ் சொருகி உள்ளிட்ட அதன் மொத்த உற்பத்தியில் 19 பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு புதுப்பிப்புகளை… Read More

உலக உடன்பிறந்தோர் தினம்

இன்று (மார்ச் 10) உலக உடன்பிறந்தோர் தினம் நமது தந்தை மற்றும் பாட்டன் காலத்தில் வீட்டில் பத்து குழந்தைகள் என்று இருந்து ஆறு, நான்கு என்பது சுருங்கி தற்போது இரண்டு அல்லது ஓன்று ஆகி விட்டது. பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பொருளாதார நெருக்கடி, பார்த்துக்கொள்ள ஆள் இல்லா நிலை, நிலையில்லா வேலை ஆகியவற்றை மனதில் கொண்டு ஒன்றே போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நம் சந்ததிகளுக்கு உறவுகளையும், அன்பையும் கொடுக்க இரு குழந்தைகள் அவசியம் தேவை, இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மனக்கஷ்டம், சந்தோஷம், விட்டுக்கொடுத்தல் என வாழ்வின் கடைசி காலம் வரை துணை என்கிற ஒன்றுக்காகவே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஷேரிங்கில் ஆரம்பித்து ஸ்நாக்ஸ் வரை ஒவ்வொன்றுக்கும் சண்டை வருதல் இயல்பு. அதன் மூலமே, அன்பும், விட்டுக்கொடுத்தலும் இருக்கும். இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை… Read More

காலை வணக்கம் -இன்று 27ம் பங்குனி

இன்று உலக ஓமியோபதி தினம் - ஜெர்மன் நாட்டு மருத்துவர் சாமுவேல் ஹானிமோன் தனக்கு வந்த மலேரியா காய்ச்சலை குணமாக்க அதிக அளவில் சின்கோனா மரப்பட்டை சாறை குடித்து குணமடைந்தார். விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு 'ஓமியோபதி' என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இழந்த செல்வத்தை வழங்கும் வராகினி வழிபாடு- திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறது. ஓம் ச்யாமளாயை விக்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் என்ற வராகினி காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜெபிப்பது சிறப்பு. நன்றி:தினத்தந்தி Read More

காலை வணக்கம் – இன்று 25பங்குனி

அன்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள். "போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்" −ஔவை "இப்பிறவியில் அடுத்தவரைக் குறைகூறி இன்பம் காண்பவன்,மறுபிறவியில் மீளமுடியாத வறுமையில் வாழ்வான்" உடல்நல குறிப்பு ஆப்பிள் மூலம் உடலை சுத்தபடுத்துவது பற்றி : ஒவ்வொருவரும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்கு மாதம் ஒருமுறையாவது உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் தற்போது ஜங்க் உணவுகளை உட்கொள்வதால், உடலின் மூலை முடுக்குகளில் டாக்ஸின்கள் தேங்கி, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். குறிப்பாக செரிமான மண்டலத்தைப் பாதித்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். ஆகவே இப்பிரச்சனைகளைத் தடுக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் டயட்டை மாதத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், உடல் முழுமையாக சுத்தமாகி, உடலியக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். காலை முதல் இரவு முழுவதும் அளவாக ஆப்பிள் மட்டும் உணவாக உட்கொள்ள வேண்டும். இன்றைய செய்தி பாலின விகிதம் நாட்டில்… Read More

மகாகவி பாரதியார் கவிதைகள்

என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னை கை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ? ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே? வீர சிகாமணி!ஆரியர் கோனே! அன்றே சொன்னான் மகா கவிஞன். வாழ்க தமிழ் Read More

இணையவலை துணுக்குகள்

வெள்ளிக்கிழமை கூகுள் தனது நீண்ட கால இணையத்தள முகவரி குறுக்குதல் சேவையை(URL shortening service) goo.gl ஐ மூட திட்டமிட்டுள்ளது. சேவை இன்னும் செயலில் உள்ளது, ஆனால் ஏப்ரல் 18 தொடங்கி, ஏற்கனவே இருக்கும் பதிவு செய்த பயனர்கள் தங்கள் goo.gl கணக்கின் பணியகத்தின் மூலம் இணைப்புகளைக் குறைக்க முடியும் என்று கூகிள் கூறுகிறது. பதிவு செய்த பயனர்கள் இணையத்தள முகவரி(URL) பகுப்பாய்வுத் தரவைப் (analytics data) பார்க்க முடியும் மற்றும் கூகிள் நல்ல சேவையை மூட திட்டமிட்டுள்ள நிலையில், மார்ச் 30, 2019 வரையில், CSV வடிவமைப்பில் உள்ள குறுகிய இணைப்பு தகவலைப் பதிவிறக்க முடியும். இதேபோல், மே 30, 2018 வரை டெவலப்பர்கள் goo.gl API க்காக பதிவு செய்ய முடியும் மற்றும் மார்ச் 30, 2019 அதே தேதி வரை API ஐ தொடர்ந்து பயன்படுத்துவார்கள். கூகிள் தனது Firebase Dynamic Links (FDL) சேவை ஆதரவக… Read More

உலக இட்லி தினம்

உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும். இட்லி குழந்தை முதல் பெரியர்வர்கள் வரை ஆரோக்கியமான உணவு. அதை பெருமை படுத்தும்விதமாக இன்று 30 மார்ச் உலக இட்லி தினம் கொண்டாடபடுகிறது இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. ஆவியில் வேக வைத்து உணவு தயாரிக்கும் முறை தமிழர்களிடம் இருந்துதான் மற்றவர்களுக்குப் பரவியதாக அறிய முடிகிறது Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.