X

BBAuthor

இன்றைய சிந்தனைக்கு

வணக்கம்! சில பணி காரணமாக நீண்ட நாட்களாக எழுத இயலவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும். இன்றைய சிந்தனைக்கு: வாழ்க்கையும், நேரமும் உலகின் சிறந்த ஆசிரியர்கள்.. வாழ்க்கை நேரத்தோட மதிப்பை சொல்லித்தருகிறது நேரம் வாழ்க்கையோட மதிப்பை சொல்லித்தருகிறது. கடிகாரம் காத்திருக்கும்போது மெதுவாக நகரும் தாமதமாகும்போது வேகமாக நகரும் சோகத்தில் நகராது மகிழ்ச்சியில் போவது தெரியாது இன்று(13-June-2018) : ஸ்ரீவிளம்பி வருடம்,வைகாசி மாதம் 30ம் தேதி,ரம்ஜான் 28ம் தேதி புதன்கிழமை,தேய்பிறை,அமாவாசை திதி இரவு 2.12 வரை; அதன்பின் பிரதமை திதி,ரோகிணி நட்சத்திரம் மாலை 5.18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்,அனுஷம். Read More

திருக்குறள்

வணக்கம் அன்பர்களே திருக்குறள் : கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. Read More

விடுகதை

இரவல் கிடைக்காது, இரவில் கிடைப்பது அது என்ன? வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது, அது என்ன? மரமோ ஒன்று, கிளைகளோ பன்னிரண்டு,இலைகளே முப்பது அது என்ன? அம்மா தந்த தட்டிலே தண்ணீர் ஊற்றினால் நிற்காது? Read More

இன்று சித்திரை 23ம் நாள்

காலை வணக்கம். நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம். இன்று சிலம்பாட்ட தினம். தமிழனின் தற்காப்பு மற்றும் போர் கலைகளின் ஒன்றான சிலம்பாட்டத்தை பாதுகாக்க மற்றும் அடுத்த தலைமுறை நம் சந்ததியினர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 'சிலம்பு' என்றால் 'ஒலித்தல்' என பொருள்படும். சிலம்பம் கம்பு மூங்கில் மற்றும் பிரம்பு கழி கொண்டு தயாரிக்கப்படுகிறது. திறப்பு,அறுப்பு,பூட்டு,அடி,குத்து,வெட்டு, வீச்சு என பலவகையான சிலம்பாட்டம் உள்ளது. நமது சேர,சோழ,பாண்டிய மன்னர் காலங்களில் இது போர்க்கலையாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டத்தில் சிலம்பு படை அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்திருக்கிறார்கள். கர்னல் அக்னி சிலம்பு கம்பு மற்றும் களரிகளை எரிக்க உத்தரவிட்டதாக வரலாறு செல்கிறது. ஆங்கிலேயர் அடக்கு முறைக்கு பின் இது கவனிப்பார் இல்லாமல் உள்ளது. நமது மரபு மற்றும் வீர கலையான சிலம்பாட்டத்தை நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வழி செய்வோம். வாழ்க தமிழ். வளர்க தமிழன் கலை. Read More

இன்றய தொழில்நுட்ப செய்திகள்

பேஸ்புக் தனது புதிய F8 டெவலப்பர் மாநாட்டில் பயனர்கள் தனியுரிமை சமூகத்தின் பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதை கட்டுப்படுத்த புதிய “Clear History” தனியுரிமை கருவி (Privacy tool) விரைவில் பயனர்களுக்கு கிடைக்கச் செய்யும் என்று பேஸ்புக் அறிவிக்கிறது. புத்தம் புதிய டொமைன் பெயரிடும் சேவை (DNS) Cloudflare இணைய பயனர்களிடையே உறுதியான தரத்தை பெற்றுள்ளது. பல டிஎன்எஸ் வழங்குநர்களைப் போலன்றி, கிளவுட் ஃப்ளேர் கண்டிப்பாக தனியுரிமை சார்ந்த சேவையாக நிலைநிறுத்துகிறது. CUJO AI தரவுப்படி, ஏப்ரல் 1 ம் தேதி முதல் துவங்கியதிலிருந்து இது மொத்த DNS சந்தையில் கிட்டத்தட்ட 4% பெற்றுள்ளது, இப்போது ஐந்தாவது மிகவும் பிரபலமான DNS வழங்குநராக உள்ளது. விண்டோஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகவும் பயனுள்ள ஏப்ரல் 18 ஆம் தேதி, "விண்டோஸ் கட்டளை குறிப்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 948 பக்கம் PDF. நீங்கள் Windows Command Reference PDF ஐ இங்கு… Read More

இன்று சித்திரை 18ம் நாள்

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். சப்த கன்னியர் பற்றி தெரிந்து கொள்ளலாம். பிராம்ஹி: மேற்கு திசைக்கு அதிபதி. சரஸ்வதி அம்சமாக பார்க்கபடுகிறாள். மாணவர்கள் காயத்ரி மந்திரத்தை 108 பிரணாயமம் செய்யவேண்டும் "ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்" மகேஸ்வரி: வடகிழக்கு திசைக்கு அதிபதி. கோபம் குறைந்து சாந்தம் அடைய 108 முறை பிரணாயமம் செய்ய வேண்டும். "ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்" வைஷ்ணவி: செல்வ வளம் பெற வழிபட காயத்ரி மந்திரம் "ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்" சாமுண்டி: யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள். "ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்" வராஹி: வராஹ முக அமைப்பில் இருப்பவள். துன்பம் விலக 108 முறை… Read More

இன்று சித்திரை 11ம் நாள்

சித்திரை 11ம் நாள் நவமி திதி ஆயில்யம் நட்சத்திரம் உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். இன்று அறிந்த தகவல் நாம் எல்லோருக்கும் தெரிந்த கோவில் மணி. மணி துத்தநாகம், காட்மியம், காப்பர்,நிக்கல்,மாங்கனீஸ் மற்றும் குரோமியம் ஆகிய உலோகத்தால் சரியான அளவில் கலந்து செய்யப்படுகின்றன. ஒருமுறை மணி அடிக்கும் போது எழுப்பும் சத்தம் 7 நொடிகள் வரை இருக்குமாம். ஆக அடுத்தமுறை நமக்கு மணி அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதை உணருங்கள். உலகில் மிகப்பெரிய பொக்கிசம் அறிவு. உலகில் மிக வலிமையன ஆயுதம் பொருமை. உலகில் மிகப்பெரிய பாதுகாப்பு நம்பிக்கை. வாழ்க வளமுடன் நன்றி: தினத்தந்தி Read More

இன்று சித்திரை 5ம் நாள்

உலக பாரம்பரியம் தினம் - ஒவ்வொரு மனிதனும் தனது பாரிம்பரியம் மற்றும் தனது பரம்பரை குறித்த தவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவேண்டும். இன்று உலகம் முழுதும் அதை உணர்த்தும் விதமாக மேலும் அதை பாதுகாக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை பற்றி எனது முந்திய பதிவுக்கு செல்ல உலக பாரம்பரியம் தினம் அக்ஷ்ய திருதியை - எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ்க. Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.