X

குடும்பத்தில் ஒரே ராசி கொண்ட இரண்டிற்கும் மேற்பட்டோர் செய்ய வேண்டிய பரிகாரம் !!!

கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கக் கூடாது என்பது ஜாதக விதி. திருமணத்திற்கு முன்பே ராசி நட்சத்திர பொருத்தம் உட்பட அனைத்து பொருத்தங்களும் பார்த்தே சேர்க்கிறோம். இருந்தாலும் காதல் திருமணம் புரிவோர் இந்த பொருத்தங்கள் பார்க்காமல் வாழ்க்கையில் இணைந்து விடுகின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் இதே போல ஒரு ராசியில் பிறக்கின்றனர். இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும். ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும். ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் கடலோரமாக உள்ள ஸ்தலத்தில் சென்று நீராடி ஸ்வாமி தரிசனம் செய்யலாம். இதை வருடம் ஒரு முறையாவது கடைபிடிக்கலாம். ஒரே ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி,… Read More

BBAuthor

முஹூர்த்தம்

நாம் எல்லோருக்கும் நல்ல முகூர்த்தம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். சூரியன் உதித்தெழுவதற்குநாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின்மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும்எழச் செய்கின்றது.இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள் புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். பிரம்ம முஹூர்த்தம்… Read More

BBAuthor

அனைத்து ராசிக்கார்களுக்கும் வெற்றிலை பரிகாரம்

மேஷ ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் அன்று முருகனை பூஜித்து சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும். ரிஷப ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட்டு சாப்பிட வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் புதன் அன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர வேண்டும். கடக ராசிக்காரர்கள் மாதுளம் பழத்தை வெற்றிலையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் காளியை வழிபட்டு உண்ண வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் தோரும் வெற்றிலையோடு வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு உண்டால் துன்பங்கள் நீங்கும். கன்னி ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் மிளகு மற்றும் வெற்றிலை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து உண்ண வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் கிராம்பு மற்றும் வெற்றிலை வைத்து வெள்ளி அன்று இஷ்ட தெய்வத்தை வணங்கி உண்ண வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் அன்று வெற்றிலையோடு பேரிச்சம்பழத்தை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து சாப்பிட வேண்டும். தனசு ராசிக்கார்கள் வியாழக்கிழமைகளில்… Read More

BBAuthor

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் !

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்! ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி! *படித்தேன்; பகிர்ந்தேன்* Read More

BBAuthor

அன்பின் வகைகள்

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே. அன்பில் 12 வகைகள் உண்டு. 1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு. 2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு. 3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு. 4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு. 5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு. 6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு. 7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு. 8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு. 9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு. 10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு. 11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு. 12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின்… Read More

BBAuthor

இந்துத் திருமணச் சடங்கு

தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை நன்கு படித்த சமய குருக்கள்  முறைப்படி அக்கினி பூர்வமாக இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி சுபவேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர்.Read More Read More

BBAuthor

பிறந்தநாள்

பிறந்தநாள் ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றனஇந்து சமயத்தில் ஒருவரின் பிறந்த நாள் அவர் சார்ந்த பிரிவினர் பின்பற்றும் சந்திர நாட்காட்டி அல்லது சூரிய நாட்காட்டியைப் பொறுத்து அதே மாதத்தில் வரும் திதி அல்லது நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றையநாளில் சிறப்பு பூசை நடத்தப்படுகிறது. ஒருவரின் முதல் பிறந்தநாள் உறவினர்களுடன் சிறப்பான சடங்காக விளங்குகிறது. நீண்ட ஆயுளுக்காக சிறப்பு வேள்வி நடத்துவதும் உண்டு.பிறந்த நாள் கொண்டாடுவது 40 சம்ஸ்காரங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆண்டு நிறைவில் ஆயுஷ் ஹோமம் என்று பெரிய ஹோமம் நடத்துவோம் அல்லது கோவிலுக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விசேட அபிஷேக ஆராதனைகளை செய்வோம். இப்போதெல்லாம் மேலை நாடுகள் போல ‘கேக்’கும் வெட்டத் துவக்கி விட்டோம்.இதேபோன்று ஒருவரின் அறுபதாவது பிறந்தநாள் (சஷ்டியப்த பூர்த்தி), எழுவதாவது பிறந்தநாள்… Read More

BBAuthor

விடுகதைகள் – விடைகள்

வணக்கம். இது ஒரு தொடர் பதிவு. முந்தய விடுகதை பதிவின் பதில்கள் Read More Read More

BBAuthor

விடுகதைகள்

விடுகதை எனப்படுவது நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.  விடுகதைகள் 'மக்களின் அறிவுத்திறனின் வெளிப்பாடு' என அறிஞர்கள் வருணிக்கின்றனர். தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறைபொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவமே விடுகதை. விடுகதைகள் கற்பனை வளத்துடன் கவிதையாகவும் கதையாகவும் உரைநடையாகவும் வழங்கி வருகின்றன. அவை தனிப்பட்ட ஒருவராலும் உருவாக்கப்பட்டவை அல்ல. காலங்காலமாக வாய்வழி வாய்வழி சொல்லக் கேட்டு செவிவழி செவிவழி பரவி வந்தவையாகும்.  காலத்திற்கு ஏற்ப அவை பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்றன. அவை நமது சிந்தனைக்கு விருந்தாக அமைந்து அறிவு வளர்ச்சிக்கு வழிகோலுகின்றன. சிறுவர் முதல் முதியோர்வரை அனைவரும் விடுகதைகள் சொல்வதிலும் அவற்றை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன? பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் - அது என்ன? அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன? அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள்… Read More

BBAuthor

உங்கள் உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்குவதில்லை என்பதை அறிய வேண்டுமா?

நம் உடலில் குறிப்பிட்ட உறுப்புக்கள் சரியாக இயங்காமல் இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும் என்பது தெரியும். சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில், உயிரியல் கடிகாரத்தைக் கொண்டு உடலுறுப்புக்களுள் எது சரியாக இயங்குவதில்லை என்பதை அறிந்து சரிசெய்யப்படுகிறது. குறிப்பாக ஒருவர் இரவில் படுக்கும் போது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விழிப்பார்கள். அது ஏன் என்று தெரியாமலும் இருப்பார்கள். ஆனால் இப்படி ஒருவர் தூக்கத்தில் விழிப்பது, அவரது உடலுறுப்போடு தொடர்பு கொண்டுள்ளதாக சீனர்களின் உயிரியல் கடிகாரம் சொல்கிறது. இங்கு சீனர்களின் அந்த உயிரியல் கடிகாரம் குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்குவதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சீன உயிரியல் கடிகாரம் சீன உயிரியல் கடிகாரம் சீனர்களின் உயிரியல் கடிகாரத்தின் படி ஒவ்வொரு உறுப்பும், தன் அதிகப்படியான இயக்கத்திற்கு 2 மணிநேரத்தை எடுத்துக்… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.