X

அறிவியல் துணுக்குகள்

செயற்கை சூரியன் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜெர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8x8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை விமான போக்குவரத்து… Read More

BBAuthor

தகவல் துணுக்குகள்

ஒருவரது ரத்த வகையை அறிந்துகொள்ள ஆய்வுக்கூடத்தில் தான் சோதனை செய்ய வேண்டும். ஆனால், சீனாவை சேர்ந்த ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், காகிதப் பட்டையை வைத்தே எல்லா ரத்த வகைகளையும், 30 வினாடிகளில் அறிந்துகொள்ளும் முறையை உருவாக்கியுள்ளனர். வயதானவர்கள் நிலை தவறி கீழே விழுவதால் எலும்பு முறிவு முதல், பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, வயதானோர் கீழே விழுவதை மூன்று வாரங்களுக்கு முன்பே கணித்து சொல்லும் முறையை, அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களின் உதட்டு அசைவுகளை படித்து புரிந்துகொள்ளும் திறனை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தந்து வெற்றி கண்டுள்ளனர். இது, மனிதர்களை விட துல்லியமாக பிறரது உதட்டசைவுகளை படித்து விடுகிறது. பி.பி.சி., செய்தி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளை வைத்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அந்த மென்பொருளுக்கு பயிற்சி தந்துள்ளனர். ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி… Read More

BBAuthor

பக்தி

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகி விடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகி விடும்.! பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.! செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.! வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகி விடும்.! பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.! இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.! ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகி விடுகிறான்.! மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!! Read More

BBAuthor

சாப்பாட்டு தத்துவம்

தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும் ! ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்! லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!! சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!! வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்! பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!! கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!! தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும். தாமதமான‬ வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க முடியாது!! தன்னம்பிக்கைச்‬  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்! வெற்றி என்பது இட்லியை போல வேகுவது… Read More

BBAuthor

உலக காசநோய் தினம்

கடந்த நூறு வருடங்களாக கொடுமையான இருமலுடன் கடும் வலியைக் கொடுத்து ஆளையே காலி செய்து விடுவது காச நோய். பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் வேகமாக பரவும் நோய்களில் காசநோய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. ஒவ்வொரு மூன்று நிமிஷத்துக்கும் 2 பேர் காச நோயினால் இறந்துவிடுகிறார்கள். காசநோய் கிருமியுள்ள சிகிச்சை பெறாத காசநோயாளிகள் இருமும்போதும், தும்மும் போதும் கிருமிகள் காற்றில் கலந்து ஆரோக்கியமாக உள்ளவர்களின் உடலுக்குள் சென்றுவிடுகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இக்கிருமி வேகமாக வளர்ந்து காசநோயின் அறிகுறிகளோடு வெளிக்காட்டுகிறது.Read More Read More

BBAuthor

மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்

மகிழ்ச்சி மற்றும் தனிமனிதப் பரிபூரண நிலை (Personal Fulfillment) என்ற இரண்டும் சரியான விஷயங்களைச் செய்வதனாலேயே ஏற்படுகிறது. உலகத்தைப் புரிந்து கொள்கிறேன் என்று நினைக்காமல், என் பாதையை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என்று செயல்படுவதும், தார்மீக ரீதியான முன்னேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று நினைக்கச்சொல்லும் சித்தாந்தத்தினை கொண்டவர் எபிக்டெடஸ். இவர் தன் கருத்துகளை, அவருடைய சீடர் களிடையே உரையாக நிகழ்த்தியுள்ளார். அவரது சீடர்களே அவற்றை எழுத்து வடிவில் எழுதிப் பாதுகாத்துள்ளனர். ராணுவ வீரர்கள் போருக்குப் போகும் போது ஒரு கையேட்டினை எடுத்துச் செல்வார்கள். அந்த வடிவமைப்பிலேயே எபிக்டெடஸின் கருத்துகளும் கையேடாகத் தரப்பட்டுள்ளது. ஷரான் லீபெல் என்பவர் தொகுத்து தந்துள்ள கிரேக்க தத்துவ ஞானியான எபிக்டெடஸ்-ன் ‘வாழ்வதற்கான கையேடு’ என்கிற புத்தகம். Read More Read More

BBAuthor

உலக தண்ணீர் தினம்

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.Read More Read More

BBAuthor

உலக காடுகள் தினம்

மார்ச் 21-ம் தேதியான இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது தவிர, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள்தாம் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள்  வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம். இந்தக் காடுகள்தாம் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன. Read More Read More

BBAuthor

8 அஞ்சலகத் திட்டங்கள்

வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. Read More Read More

BBAuthor

தண்ணீர் சேமிக்க

நீர் நிலைகளில் நிறைந்திருந்த தண்ணீரை உறிஞ்சியதோடு அல்லாமல், உடலின் வியர்வைத் துளிகளையும் கூட தாகத்துடன் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது சூரியன். வெயில் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்னை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்று நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீர் தான், நாளை நம் தாகத்தை தீர்க்கப்போகிறது. தண்ணீர் சேமிக்க அரசாங்கம் சரியான திட்டங்களை இடவில்லை, காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடவில்லை, முல்லைப் பெரியாரின் தண்ணீரை கேரளா மறித்துவிட்டது, இயற்கையே மாறிவிட்டது, மழையில்லை, தண்ணீருக்கு என்ன செய்ய? என நம் கை மீறிய பல விஷயங்களை மட்டுமே குறை சொல்லாமல், ஒரு தனி மனிதனாக , சின்ன சின்ன செயல்பாடுகளின் மூலம் எப்படி தண்ணீரை சேமிக்கலாம் என்பதை நாம் எண்ணி, செயல்பட வேண்டிய தருணம் இது. Read More Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.