X

உலக புவி தினம்

சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து  வருகிறது பூமி. அதைப் பற்றியும், அதை  பாதுகாப்பது தொடர்பாக சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை. சூரிய குடும்பத்தில் மொத்தம் 8  கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக, பூமிக்கு மட்டும்தான், உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது.Read More Read More

BBAuthor

சோளப் பணியாரம்

தேவையானவை: சோளம் – ஒரு கோப்பை, உளுந்து – கால் கோப்பை, வெந்தயம் – சிறிதளவு, சின்ன வெங்காயம் – ஒரு கையளவு, பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப, கல் உப்பு – ருசிக்கேற்ப. செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம். மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம். பலன்கள்: உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. ‘என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன்,… Read More

BBAuthor

நிலக்கடலைத் துவையல்

தேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை – 250 கிராம், பூண்டு – 10 பல், புளி – சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் – தலா இரண்டு, உப்பு – சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு. செய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும். பலன்கள்: இதில் நல்ல கொழுப்பு, புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். Read More

BBAuthor

சோள தோசை

தேவையானவை: சோளம் – 500 கிராம், உளுந்து – 100 கிராம், வெந்தயம் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும். பலன்கள்:- ”பஞ்சம் தங்கிய உணவு” என்று சோளத்தை, கிராமத்தில் சொல்வார்கள். நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. Read More

BBAuthor

உலக கல்லீரல் தினம்

ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது . மக்களிடையே கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், இந்த அற்புத உறுப்பைக் காப்பாற்றவும் இந்த தினம் கொண்டாடப் படுகிறது. இப்போது மக்களுக்கும் மற்றும்  உடல்பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கும் கூட  கல்லீரல்மற்றும் அதன்  நோய்கள் பற்றிய தகவலையும், எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது, என ஐக்கிய நாட்டு சபை கருதுகிறது. அதற்காகவே, இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றங்களும் நடைபெறும் மேடை கல்லீரல்தான்.   Read More Read More

BBAuthor

சிறுதானிய தோசை

செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 தேக்கரண்டி அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்! பலன்கள்: கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள இரத்தக் கொழுப்பைக் (கொலஸ்ட்ராலை) கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெல்லம் / கருப்பட்டி யின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக்… Read More

BBAuthor

தானிய வடை

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த பொருத்தம். Read More

BBAuthor

கோடை வெயிலை சமாளிக்க

கோடை ஆரம்பமானதிலிருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். உஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. ஆக வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது கோடை காலத்தில் வெயிலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு… Read More

BBAuthor

உலக பாரம்பரிய தினம்

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை வளர்ந்து வரும் வேகமான காலத்தில் காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day). அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது.    அது சரி..இந்த உலக பாரம்பரிய நாள் தோன்றியதை கொஞ்சம் விளக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ: 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “International Day for Monuments and Sites” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.”World Heritage Day”. Read More Read More

BBAuthor

உலக ஹீமோபிலியா தினம்

உலக ஹீமோபிலியா தினம் 17th April அனுசரிக்கப்படுகிறது. ‘50 ஆண்டுகளில் அனைவருக்கும் நவீன சிகிச்சை’ என்பதை மைய கருத்தாக கொண்டு இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை (டிபிள்யு ஹெச் எப்) கடந்த 1963&ல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார். கடந்த 1989 முதல் அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17&ல் உலக ஹீமோபிலியா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.Read More Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.