X

இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்

 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மே 11ல் என்ன நடந்தது:ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 மே 11ம் தேதி, இந்தியா மூன்று அணுகுண்டு சோதனைøயும், மே 13ம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனைøயும் வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாளே "தேசிய தொழில்நுட்ப தினமாக' அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது. விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், இந்தியா… Read More

BBAuthor

சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சித்திரத்திலிருந்து சித்திர… Read More

BBAuthor

அறிவோம் கற்பூரவல்லி

ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லியின் மற்றொரு பெயர் ஒமவல்லி.பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமன ஆவியாகும் தன்மையுடைய நறுமண‌ எண்ணெய் இந்த… Read More

BBAuthor

அறிவோம் தொட்டா சிணுங்கி

தொட்டாற்சுருங்கி முழுத்தாவரம் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையும் கொண்டது. தொட்டாற்சுருங்கி பரந்து விரிந்த வளரியல்பு கொண்ட சிறுகொடி வகைத் தாவரம். தாவரம் முழுவதும் சிறு முட்கள் காணப்படும். இவை, நேராகவோ, வளைந்தோ இருக்கும். இலைகள், சிறகு வடிவமாக கூட்டிலையானவை. தொட்டால் வாடிவிடும் இதன் இலைகளின் சிறப்பான அமைப்பாலேயே இது தொட்டாற்சுருங்கி என்கிற பெயர் பெற்றது. தொட்டா சிணுங்கி செடியின் இலையை தொட்டவுடன் அது உடனே மூடிக்கொள்ளும், கொஞ்ச நேரம் கழித்து தானாக திறந்து கொள்ளும். அதை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த செயல் தொட்டா சிணுங்கி தாவரத்தின் தனி சிறப்பாகும். இதற்கு காரணம் தான் என்ன? இச்செயலுக்கு காரணம், இத்தாவரத்தில் இருக்கும் இரண்டு மிக முக்கிய வேதிப்பொருளாகும், அவை மிமோபுதின் (Mimopudine) பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate) மிமோபுதின் (Mimopudine) என்ற வேதிப்பொருள் இலையை திறப்பதற்கும், பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate) என்ற வேதிப்பொருள் இலையை மூடுவதற்கும்… Read More

BBAuthor

அறிவோம் மாதுளம் பழம்

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் நமக்கு கிடைக்கின்றன. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடலுக்கு ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும். மாதுளம் பழத்தில் யுரோலித்தின் ஏ என்ற பொருள், நம் உடலில் செல் சுத்திகரிப்பு மையமான மைட்டோகாண்ட்ரியாவில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தச் செய்கின்றன. இதன்மூலமாக, உடலில் உள்ள செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஆற்றலுடன் செயல்பட முடிகிறது. மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தச் சோகையைத் தடுக்க உதவுகிறது. மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்துக்கு நல்லது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் சுரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும்… Read More

BBAuthor

உலக செஞ்சிலுவை தினம்

உலக செஞ்சிலுவை - செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும். இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர். உலக செஞ்சிலுவை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1934ம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984ல் இருந்து இந்நாள் உலக… Read More

BBAuthor

‌விடுகதைக‌ள்

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது? உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார்? நின்று கொண்டே இருந்துவிட்டு பலருக்கும் வழி கூறுவான். உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன? கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன? ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன? ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன? ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்? அவனுக்கு காவலுக்கு… Read More

BBAuthor

அழகு குறிப்புகள்

திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும். இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச் முட்டைக் கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு ஈஸ்ட், ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகத்தில் தடவி பேக் போடவும். 20… Read More

BBAuthor

உலக தீயணைப்பு படையினர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக, உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4ம் நாள் சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாகக் பின்பற்றப்படுகிறது. Read More Read More

BBAuthor

அறிவோம் வெற்றிலை

நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு. மரத்தின் மீது ஏறி படரும் கொடியான வெற்றிலையை அகத்திக்கீரையோடு ஊடு பயிராகப் பயிரிடுவது நம்மவர்களின் வழக்கம். வெற்றிலையின் தாவரப்பெயர் Piper betle என்பதாகும். ஆங்கிலத்தில் Betel pepper என்பர். தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியில் பல்வேறு பெயர்களை வெற்றிலை பெற்றுள்ளது. தமிழில் வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு பொருளின் பெயரிலேயே அதன் தன்மையைப் பொதிந்து வைப்பது தமிழர்கள் வழக்கம். அந்த வகையில் சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தத்தக்க சிறந்த மூலிகை யான வெற்றிலைக்கும் சுவாரஸ்யமான காரணத்தால்தான் பெயர் வைத்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும். எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.