X

கேரட் மில்க் ஷேக்

கேரட் மில்க் ஷேக்கை இருவையாக செய்யலாம். முதல் முறை ஒரு குவளை கேரட் துருவல் அதே அளவு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து, சிறுது ஏலக்காய் தேவையான அளவு நீர் மற்றும் சக்கரை சேர்த்தால் கேரட் மில்க் ஷேக் தயார். இரண்டாவது முறை ஒரு குவளை கேரட் துருவலை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். நன்கு உறிய பாதம் பருப்பை தோலை நீக்கி வைத்து கொள்ளவும். இப்பொழுது இரண்டுடன் சிறுது பாலை சேர்த்து விழுது போல அரைத்து அதனுடன் சிறிது வெண்ணிலா, சர்க்கரை மற்றும் தேவையான அளவு பால் கலந்தால் கேரட் மில்க் ஷேக் ரெடி. Nutrition Facts Calories 60 Sodium 310 mg Total Fat 2 g Potassium 0 mg Saturated 0 g Total Carbs 3 g Polyunsaturated 0 g Dietary Fiber 0 g Monounsaturated… Read More

BBAuthor

மாம்பழ லட்டு

தேவையானப் பொருட்கள் மாம்பழ கூழ் - 1/2 கப் சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப் தேங்காய் பவுடர் - 1 கப் ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் நட்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது… Read More

BBAuthor

அறிவோம் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும். அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு… Read More

BBAuthor

உலக பல்லுயிர் பெருக்க தினம்

இந்த பூமி பந்தில் மனிதர்கள் மட்டும்மல்ல, பூரன், பூச்சி முதல் காண்டாமிருகம் வரை அனைத்துவிதமான காட்டு, நாட்டு விலங்கினங்களும், பறவைகளும், கடல் வாழ் உயிரினங்களும் வாழக்கின்றன. மனிதன்க்கு இந்த உலகத்தில் வாழ எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே அளவுக்கு, ஏன் அதை விட அதிகமான உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த பூமி நமக்கு மட்டுமே என்கிற நினைப்பில் வாழ்வது மனித இனம் மட்டுமே. மற்ற எந்த உயிரினமும் இங்கு நாம் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பதில்லை. பார்க்கும் இடம்மெல்லாம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பு மனிதனிடத்தில் மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150… Read More

BBAuthor

சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன. Read More Read More

BBAuthor

அறிவோம் கடுக்காய்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.உஷ்ணத்தால் பித்த நோய்களும்,காற்றினால் வாத நோய்களும்,நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன. கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும். கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும். சமவெளியில் அரிதாக… Read More

BBAuthor

உலக குடும்ப நாள்

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.Read More Read More

BBAuthor

உலகில் அன்னையர் தினம்

இந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். தான் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அந்த தாய்க்கு இணையாக வேறு யாரை குறிப்பிட முடியும்? இந்த தியாகத்தை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகில் அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும். பண்டைய காலங்களில் அன்னைக்கான மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம். இந்த வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடியவர்கள் என சொல்லலாம். இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான… Read More

BBAuthor

தெரிந்து கொள்வோம்

உலகில் உள்ள கடல் பகுதியில் மிகவும் ஆழமானது மரியானா அகழி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 11 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. இந்த பகுதி வடக்கு பசிபிக் பெருங்கடல் மரியானா தீவுக்கு அருகில் உள்ளது. உலகில் மிகப்பெரிய ஆல மரம் கொல்கத்தாவில் உள்ள தாவர இயல் பூங்காவில் அமைந்துள்ளது. இது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழுதுகள் கொண்டது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த மரம் பரவி இருக்கிறது. உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 7 சிகரங்கள் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. Read More

BBAuthor

செவிலியர் தினம்

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் "செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ்… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.