X

வரகு அரிசி

பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி. சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது. இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.  இதன் வயது 5 மாதங்கள்.அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது. ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது. நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும். ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8… Read More

BBAuthor

உலக கடல் நாள்

உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், 'உலக பெருங்கடல்கள் நாள்' ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.Read More Read More

BBAuthor

மருதாணி

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி… Read More

BBAuthor

வைகாசி விசாகம்

எனது முதல் பதிவின் வைகாசி விசாகம் தொடர்ச்சி. முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள் முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் நடைபெறும் தீமிதித் திருவிழா, மிகவும் பிரபலம். பிரமாண்டமான பூக்குழியை பலநூறு பக்தர்கள் ஆவேசம் பொங்க கடந்து செல்லும் காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவின் போது அருகிலுள்ள வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக இங்கு… Read More

BBAuthor

Quotes

Every time you smile at someone, it is an action of love,a gift to the person, a beautiful things. - Mother Teresa. Motivation is when your dreams put on work cloths. - Benjamin Franklin. Teaching is a very noble profession that shapes the character,caliber,and future of an individual. If the people remember me as good teacher,that will be the biggest honour for me. - A.P.J.Abdul Kalam. Read More

BBAuthor

மலர்கள் சூடுவது மற்றும் நன்மைகள்

மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை பூ மட்டும் தான் உன்ன உகந்தது என எண்ணி வருகிறோம். ஆனால், பெண்கள் தலையில் சூடும் சில பூக்களும் கூட உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றது..  பூ சூடுவது என்பது ஒரு பாரம்பரியமான பழக்கம். இதை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்று இருக்கிறார்கள். ஆரோக்கியமான பழக்கம் இது.தினமும் பூ பறிப்பது ஒரு நல்ல அனுபவம். பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். அல்லது பூ பறிக்க கற்று கொள்வது பொறுமையை வளர்க்கும். பொறுமைக்கு பூமா தேவியை உதாரணமாக சொல்வர். பூவை பறிப்பவர்களிடத்தில் சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. Read More Read More

BBAuthor

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம்… Read More

BBAuthor

Quotes

The value of life is not based on how long we live,but how much we contribute to others in our society. - Buddha. To succeed in your mission, you must have single-minded devoted to your goal.- A.P.J Abdul Kalam The best preparation for tomorrow is doing your best today. Only those who attempt the absurd can achieve the impossible. - Einstein Read More

BBAuthor

உலக தைராய்டு தினம்

உலக தைராய்டு தினம் இன்று; மனிதனின் கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பி, நாளமிள்ளா சுரப்பிகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் கீழ்ப் பகுதியின் மையத்தில் உள்ளது. உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்பவை இந்த ஹார்மோன்கள்தான்.Read More Read More

BBAuthor

பிராணாயாமம்

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்! எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும். இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.