X

உலக வன விலங்குகள் தினம்

உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடபட்டது, பின் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற நூற்றாண்டில் 40,000 புலிகள் வாழ்ந்துள்ளன. தற்போது 1,750 புலிகள் மட்டுமே வாழ்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வன விலங்குகள் ஒரு நாட்டின் விலை மதிப்பற்ற செல்வம். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, டைனோசர் முதல் பல்வகை அரிய வனவிலங்குகள் காடுகளை ஆட்சி செய்து வந்துள்ளன. படிப்படியாக மனித இனம் உலகில் அதிகரித்ததால், காடுகளில் சுதந்திரமாக… Read More

BBAuthor

உலக வசிப்பிட நாள்

உலக வசிப்பிட நாள் (World habitat day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக 1986 ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் நமது நகரங்களில் அடிப்படை மனித உரிமைகளுடன் போதுமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். வாழ்விடத்தின் அவசியம் குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்தும் கூட்டுப் பொறுப்பையும் இது வலியுறுத்துகிறது. 2016 ஆம் ஆண்டில், உலக வசிப்பிட தினத்திற்கான தீம் "மையத்தில் வீடாக" ( "Housing at the Centre") இருந்தது, அங்கு நகர்ப்புற பகுதிகளில், நகரங்களில் மற்றும் நகரங்களில் அனைவருக்கும் மலிவு வீட்டு வசதி தேவை பற்றி விழிப்புணர்வை நோக்கமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்கான தீம் "வீட்டுவசதி கொள்கைகள்: கட்டுப்படியாகக்கூடிய வீடுகள்."("Housing Policies: Affordable Homes") Read More

BBAuthor

உலக ரேபிஸ் தினம்

ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என… Read More

BBAuthor

பசுமை நுகர்வோர் தினம்

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.  மேற்கத்திய சமூகங்களில், 60 களில் மற்றும் 70 களின் முற்பகுதியில், சுற்றுச்சூழலையும் மக்களுடைய சுகாதாரத்தையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை தொழில்துறை மாசுபடுத்தல்களால் ஏற்பட்டுள்ள விளைவுகள் மற்றும் பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சியால் நுகர்வு இந்த புதிய யோசனை உருவாக்கப்பட்டது. 1980 களில் முதல் அமெரிக்க "பசுமை" பிராண்டுகள் அமெரிக்க சந்தையில் தோன்றி, வெடித்தன. 1990 களில் பசுமை உற்பத்திகள் மெதுவான மிதமான வளர்ச்சியைக் கொண்டிருந்தது, இது ஒரு முக்கிய நிகழ்வு. பசுமை பொருட்களில் அமெரிக்க ஆர்வம். 2000 களின் முற்பகுதியில் அதிக வேகத்துடன் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது மற்றும்… Read More

BBAuthor

பாராட்டு எனும் மந்திரம்

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.  யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா? குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான்… Read More

BBAuthor

பணம் சார்ந்த பழமொழிகள் / அனுபவ மொழிகள்

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு. ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு. உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான். பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான். உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற! அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும். செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது. செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும். ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான். லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே ! ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம். முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம். (படித்ததில் பிடித்தது) Read More

BBAuthor

பூக்களின் ஏழு பருவங்கள்

ஒரு பூவானது நிஜத்தில் பல பரிணாமங்களை கொண்டது. ஆனால் நாம் அதை எளிதாக பூ அல்லது மலர் என சொல்லி விடுகிறோம். ஒரு பூவின் முதல் நிலை அரும்பு. அதாவது பூக்கும் செடி கொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு நிலையை அடையும். அரும்பின் மூன்று நிலைகள் நனை, முகை, மொக்குள் என்பவையாகும். அதை தொடர்ந்து இரண்டாம் நிலையான மொக்கு விடும் நிலை. இது அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை. அடுத்து மூன்றாம் நிலையான மொட்டு, முகிழ்க்கும் நிலையான முகை. இதையே நறுமுகையே என பல கவிகளும் பாடுகின்றனர். அதைத் தொடர்ந்து நான்காம் நிலையான,மலரும் நிலை.அதாவது மலர். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த, மிக எளிமையாய் காணக்கிடைக்கும் பூக்களின் நிலை. மேல் சொன்ன மூன்று நிலைகளும் பொதுவாக பூக்களை விரும்பி வளர்ப்பவர்களே பொதுவாக கண்டு அறிந்திருக்கும்… Read More

BBAuthor

பொன்மொழிகள்

தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம்: தேவைகள் பூர்த்தியாக ஆசை கொண்டால், வாழ்க்கை இன்பமாகும். ஆசைகள் பூர்த்தியாக தேவைகள் கொண்டால், வாழ்க்கை துன்பமாகும். காதைத் திறந்து கேள் அது மற்றவர் அனுபவம், கண்ணைத் திறந்து பார் அது உனக்கு அனுபவம் சிறிய ஓட்டை பெரிய கப்பலை கவிழ்த்து விடும், சிறிய வார்த்தை ஒரு நல்ல நட்பையே முறித்து விடும் புத்திசாலி என்பவன் மற்றவன் அனுபவத்தில் கற்றுக் கொள்கிறான் முட்டாள் என்பவன் தானே அனுபவித்தும் கற்றுக்கொள்கிறதில்லை தினம் ஒரு செடி வளர்வதைப் பாருங்கள் மனம் வளரும், தினம் ஒரு மலர் வளர்வதைப் பாருங்கள் மனம் மலரும் கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்". உங்கள் கனவுகளை நோக்கிப் பயணிக்க வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. நினைவில் வைத்ததுக்கொள்ளுங்கள் வயது ஒரு இலக்கமே! Read More

BBAuthor

ஆற்றல் சக்கரங்களும் தமிழ் மொழியும்

நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே தனது மொழியாக்கியவர்கள் தமிழர்கள். பல்வேறுவிதமான நோய்களுக்குத் தமிழ் மொழியே மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் நம் பிணிகளைப் போக்கும் மாத்திரைகள் போன்று செயல்படுகின்றன என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். 1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.… Read More

BBAuthor

Quotes

"Time is like a river. You can't touch the same water twice, because the flow that has passed will never pass again. Enjoy every moment of your life." Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.