X

சிந்தனை குறிப்பு

வாழ்க்கை வளமாக்கும் சிந்தனை குறிப்பு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித்தருகின்றனர். உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதில் கவனம் மற்றும் நேரத்தை அதிகம் செலுத்துங்கள். அதிகாலை எழுந்திருக்க பழகுங்கள். வெற்றிபெற்ற பலரும் அதிகாலை எழுபவர்கள். படித்ததில் பிடித்தது!! தொடரும்... Read More

BBAuthor

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பான நண்பர்களுக்கு, எனது உள்ளம் கனிந்த ? தீபாவளி?  நல்வாழ்த்துக்கள். Read More

BBAuthor

உலக வறுமை ஒழிப்பு தினம்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக இந்நாள் 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் உலக ளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17-ஐ வறுமை ஒழிப்பு நாளாகஅதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம்… Read More

BBAuthor

சர்வதேச உணவு தினம்

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "இடம்பெயர்வு எதிர்காலத்தை மாற்றவும். உணவு பாதுகாப்பு… Read More

BBAuthor

தீபாவளி பலகாரங்கள்

பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக,பண்டிகை விருந்து படைக்க இதோ. கடலைப்பருப்பு சுய்யம் தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை. செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு… Read More

BBAuthor

உலக பெண் குழந்தைகள் தினம்

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி பாட்டிற்க்கிணங்க பெண் குழந்தைகள் தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது. பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் ஐ.நா. சபை 2011-ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012-ல் முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்’ என்பது இத்தினத்தின் மையக்கருத்து. பெண்குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்கு முக்கியம். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும். இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு… Read More

BBAuthor

பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் உணவு முறை

சமையல், அது ஒரு வேலை... இல்லையில்லை அது ஒரு கலை என்கிறார் ஒருவர். சமையல் என்பது சயின்ஸ் என்று சொல்கிறார் ஒருவர். எது எப்படியோ சமையலில் பலவகை உண்டு. ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக் கொழுப்பும் சேர்ந்துவிடும். இதன் அடிப்படையில் நாம் உண்ணும் உணவு பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் என வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உடலுக்கு நல்லது, எவற்றைத் தவிர்க்கவேண்டும்.. பாசிட்டிவ் உணவு முறை பெரும்பாலான சத்துகள் அப்படியே கிடைப்பதை பாசிட்டிவ் உணவுகள் என்கிறோம். உதாரணமாக பழங்கள், சமைக்காத காய்கறிகளைச் சாப்பிடுவது, பச்சடி, பழச்சாறு, இளநீர், தயிர், நீர்மோர், இட்லி, இடியாப்பம், நீர்க்கொழுக்கட்டை, பொங்கல், எண்ணெய் இல்லாத தோசை, சப்பாத்தி போன்றவற்றைச் சொல்லலாம். நெகட்டிவ் உணவு முறை சத்துகள் நீங்கி கெட்டக்… Read More

BBAuthor

நட்சத்திரவடிவம்

ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம். அஸ்வினி - குதிரைத்தலை பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம் கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம் மிருகசீரிடம் - மான்தலை,தேங்கைக்கண் திருவாதிரை - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி புனர்பூசம் - வில் பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி மகம் - வீடு,பல்லக்கு,நுகம் பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை ஹஸ்தம் - கை சித்திரை - முத்து,புலிக்கண் ஸ்வாதி - பவளம்,தீபம் விசாகம் - முறம்,தோரணம்,குயவன்சக்கரம் அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல் கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி மூலம் - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை பூராடம் - கட்டில்கால் உத்திராடம் - கட்டில்கால் திருவோணம்… Read More

BBAuthor

உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களை சோம்பலை போக்கி, மனக்காயத்தை துடைத்தால் மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதை தடுக்க முடியும். இந்த கருப்பொருளை மையமாக வைத்தே உலக மனநலம் மையம் சார்பில் 1992ல் உலக மனநலம் தினத்தை நாடுகள் அனுசரிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடப்பட்டது. அதன்படி 1994 முதல் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், இந்த ஆண்டின் கருப்பொருள் ‘பணி இடத்தில் மனநலம்’ என்பதே. மக்களிடம் மனநோய் மற்றும் மனநல… Read More

BBAuthor

உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874 இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது. இன்றைக்கு இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், என்று விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும், விரலால் கடிதம் எழுதி தபால் பெட்டிகளில் அனுப்பிய காலத்தை மறக்க முடியாது. ஸ்காட்லாந்தில் 1712-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் நிலையம்தான் உலகின் மொத்த தபால் நிலையங்களுக்கும் தாய் வீடாகும். இன்றைக்கும் அந்த தபால் நிலையம் மக்கள் சேவையாற்றி வருகிறது. இன்றைக்கு உலகில் 8 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே அதிக தபால்… Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.