X

பொன்மொழி

"வாழ்க்கை மிகவும் அழகானது, உங்களுடைய போராட்டம் வலிமையாக இருக்க வேண்டும் ஆனால் மற்றவர்களுடைய பலவீனத்தோடு அல்ல! உண்மையான வெற்றிகள் உங்கள் முயற்சிகளில் இருப்பதால், மற்றவர்கள் தோல்வியடைவதில்லை " Read More

BBAuthor

பொங்கல் வாழ்த்து

உங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் Read More

BBAuthor

இந்தியா தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. இராமகிருஷ்ணர் இறந்த பின் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த… Read More

BBAuthor

நம் கல்வி முறை

வணக்கம் நண்பர்களே. இன்று இணையத்தில் உலாவியபோது விகடன் இணையதளத்தில் ஒரு கட்டுரை இன்றய கல்வி திட்டத்தின் அடிப்படை பிரச்சனை தற்சயலாக படிக்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. வேலையில்லாத் திண்டாட்டம், புதிய சிந்தனையின்மை, திறன் குறைவு என, இன்று நம் இளைஞர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் நாம் சொல்லும் ஒரே காரணம் `நம்முடைய கல்வித்திட்டம் சரியில்லை' என்பதுதான். கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை, இன்று நாம் ஒவ்வொருவரும் பட்டியலிடுகிறோம். அடிப்படையில், அத்தனை குறைகளுக்கும் காரணமாக இருப்பது ஒன்றுதான். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்குப் பேர்போன அமெரிக்காவின் `நாசா' அமைப்பு, அந்தக் காரணம் என்னவென்று அறிய ஆய்வு மேற்கொண்டது. பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், எப்படிச் செயல்படுகிறார்கள், அவர்களின் கனவு என்ன, பள்ளி மற்றும் பாடம் குறித்து அவர்களின் எண்ண நிலைப்பாடு என்ன, என ஆராய்ச்சி செய்தபோது, குழந்தைகளில் 98 சதவிகிதத்தினர் வெவ்வேறான சிந்தனை கொண்டவர்களாக இருப்பது… Read More

BBAuthor

உணவு – உடல்

உடல் உஷ்ணம் என்பது நம் உடலில் உள்ள தசைகள் சுருங்கி விரியும்போது நம் உடலுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் ஏற்படக்கூடியது. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்வதன் வழியே நோய்களிலிருந்து தப்பிக்கலாம். பனிக்காலம் மற்றும் மழைக் காலங்களில் உடலின் வெப்பநிலை குறைந்து காணப்படும். வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் எளிதில் அதிகரிக்கும். இவ்வாறு உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப உணவிலும் நாம் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் நோயில்லாமல் வாழ முடியும். நாம் உண்ணும் உணவு சூடாகவோ குளிர்ச்சியாகவோ இருப்பதைப் பொறுத்தே உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் உண்டாகும். தட்பவெப்பநிலைக்கு மாறாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்கள் உடலுக்குள் சென்று செரிமானமாகிச் சூட்டையோ குளிர்ச்சியையோ அதிகரிக்கச்செய்துவிடும். இவ்வாறு உணவுப்பொருள்களின் சுவையின் அடிப்படையில் நம் உடலின் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படும். பருவ காலங்களின் அடிப்படையில் என்னென்ன உணவுகளை உண்ணலாம் என்று பார்ப்போம். கார் காலம்: ஆவணி, புரட்டாசியில் வெப்பத்துடன் கூடிய மிதமான குளிர் இருக்கும். இந்தக் காலங்களில் உடல்… Read More

BBAuthor

ஆருத்ரா தரிசனம்!

திருவாதிரை நோன்பு (ஆருத்ரா தரிசனம்!) மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை… Read More

BBAuthor

திருவாதிரைக் களி

தேவையான பொருள்கள்: பச்சரிசி – 2 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் வெல்லம் – 3 கப்* தேங்காய் – 1 மூடி (பெரியது) தண்ணீர் – 9 கப் நெய் – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி செய்முறை: பச்சரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுத்து ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, அரைத்துவைத்துள்ள அரிசி, பருப்புப் பொடிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும். நன்றாக சேர்ந்து வந்ததும் குக்கரில் 6,7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்துக் களியுடன் சேர்க்கவும். அரிசி பருப்பை ரவை மாதிரி அரைத்து மாவில்லாமல் சலித்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கிளறும்போது கட்டிதட்டிக் கொள்ளும். Read More

BBAuthor

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Read More

BBAuthor

கணித மேதை ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம் பிறந்த தினமின்று! இராமானுசன் அவர்களுக்கு கணிதத்தில் மிகுதியான ஆர்வமும், தனிச்சிறப்பு தன்மையும் இருந்தது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாக திகழ்ந்தார். இராமானுசன் அவர்களின் குறிப்பிடத்தக்க கணிதத் தேற்றங்களில் சில – ‘எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு’, ‘நீள்வளையச்சார்புகள்’,  ‘தொடரும் பின்னங்கள்’, மற்றும் ‘முடிவிலா தொடர்’. கணித மேதை அவரை பற்றி : அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை. அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம்… Read More

BBAuthor

Quotes

"Once you replace negative thoughts with positive ones, you'll start having positive results." "Brave concept is "Do or Die" Practical concept is "Do before you Die" Winner's concept is "Don't Die, until you Do it"." யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள் ! ஏனெனில் அதில் வெற்றி பெற்றால் ஒரு எதிரியைப் பெறுவீர்கள் ! தோல்வியுற்றால் ஒரு நண்பனை இழப்பீர்கள் ! Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.