Views: 19
இந்த உலகில் தோன்றிய ஆதி வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.
நாம் செய்யும் செயல்கள் மட்டுமல்ல செய்யாத செயல்களும் நமக்குப் பாவங்களையும் புண்ணியங்களையும் ஏற்படுத்தும் என்கின்றன சாஸ்திரங்கள்.
ஒவ்வொரு யுகத்திலும் முக்தியை அடைய மாறுபட்ட வழிகள் வகுக்கப்பட்டிருந்தன என்கிறது விஷ்ணுபுராணம்.
ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன. சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் ஏழு வண்ணங்களே ஏழு குதிரைகளாகச் சுட்டப்படுகின்றன. பீஷ்மரை வியாசர் எருக்கம் இலை கொண்டு அலங்கரித்த தினம் ரதசப்தமி. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும்.