X
    Categories: Common

கார்த்திகை 3ம் நாள்

Views: 31

வணக்கம். இன்று 19 நவம்பர் 323ம் நாள் தமிழ் கார்த்திகை 3ம் நாள் , இன்னும் 42 நாட்கள் உள்ளன ஆங்கில புத்தாண்டுக்கு. உலக ஆண்கள் தினம்.

தமிழகத்தில் பண்டையகாலத்தில் நீர்நிலைப் பெயர்கள் பற்றி அறிவோமா

'அருவி' - மலைப்பகுதில் தேக்கநீர் நேர்கோட்டில் மேலிருந்து விழுவது.
'ஆழிக்கிணறு' - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு.
'ஆறு' - ஓடும் நதி.
'உறைக்கிணறு' - மணற்பாங்கான இடத்தில் தோண்டி வட்ட வளையமிட்டு கட்டப்பட்ட கிணறு.
'ஊருணி' - மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை
'ஏரி' - வேளாண்மைக்கு பாசன நீர்நிலை
'குண்டம்' - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை
'குண்டு' - குளிப்பதற்கு ஏற்ற சிறுகுளம்
'கேணி' - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.

வாழ்க வளமுடன்!! வாழ்க நலமுடன்!!
Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.