X

குரு பெயர்ச்சி

Views: 118

வணக்கம்.

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
புரட்டாசி 18
ஆங்கிலம் : 04 October 2018
வியாழக்கிழமை
தசமி இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி
பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம்
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம்

உலக வன விலங்குகள் தினம்.

குரு பெயர்ச்சி
பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்தவர் குரு பகவான்(பிருகஸ்பதி). இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார்.

இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இது சோதிடத்தின் படி இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்ப்பார் என சோதிடம் சொல்கிறது. இப்படி பல சிறப்புக்கள் மிக்க குரு பகவான் இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

குரு ஸ்லோகம்

குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம்

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் மேற்க்கூறிய மந்திரத்தை படித்து குரு பகவான் அருள்பெற்று வளமுடன் வாழ்க

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.