X

ஓம் சிவாய நம! கோவிந்தா!!கோவிந்தா!!

Views: 134

இன்று புரட்டாசி 6ம் நாள் சனிக்கிழமை. பொதுவாக புரட்டாசி மாதம் என்றல் புனிதமான மாதம். பெரும்பாலான மக்கள் அசைவம் விட்டு சைவமாக ஒருமாத காலம் விரதம் மாதிரி கடைபிடிப்பார்கள். அறிவியல் பூர்வமாக இந்த மாதம் மழை மற்றும் வெயில் இருப்பதால் புலால் உண்ணாமல் இருப்பது நலம் என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை சொல்லுகிறது.

ஒரு விஷயம் பார்த்தீர்களா சில நாட்களுக்கு முன் திருமலையில் தேரோட்டம் நடந்து முதல் சனிக்கிழமை பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கு முக்கியமான சனி மகா பிரதோஷம்.

சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் தங்களால் முடிந்த அபிசேக பொருட்களை வழங்கி வழிபடலாம்.

பகல் முழுதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் படித்து பெருமாளை வணங்கி மாலையில் சிவனின் பிரதோஷ தரிசனம் செய்த பிறகு, உப்பு காரம் புளி அதிகம் சேர்க்காத உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

கொசுறு தகவல்(படித்ததில் பிடித்தது)

மேஷ ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த கிழமையிலும் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது சிறந்தது என்றாலும், இந்த ராசிக்குரிய கிழமையான செவ்வாய் கிழமையில் “ஓம் வைஷ்ணவே நமஹ” என்ற மந்திரத்தை துதித்த வாறு வழிபடுவது மிகவும் சிறந்த பலனை தரும்.

ரிஷப ராசியினர் புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை வாரத்தின் எந்த நாளிலும் வழிபடலாம். ஆனாலும் இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்திற்குரிய கிழமையான வெள்ளிக்கிழமையில் “;ஓம் வாசுதேவாயே நமஹ” என்ற மந்திரத்தை துதித்த படி பெருமாளை வழிபடுவது சிறந்தது.

மிதுன ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த கிழமையிலும் வழிபடலாம். இந்த ராசிக்குரிய தினமான புதன் கிழமையன்று திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று “ஓம் கேசவாயே நமஹ” என்கிற மந்திரத்தை ஜெபித்த படி பெருமாளை வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.

கடகம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் வாரத்தில் எந்த கிழமையிலும் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபடலாம். சிறந்த பலனை பெறுவதற்கு இந்த ராசிக்குரிய தினமான திங்கட்கிழமையில் திருமலை கோவிலுக்கு சென்று “ஓம் ராதா க்ரிஷ்ணாய நமஹ” என்ற மந்திரதை உரு ஜெபித்து வழிபட வேண்டும்.

சிம்ம ராசியினர் புரட்டாசி மாதத்தில் வாரத்தின் எந்த நாளிலும் திருமலை கோவிலுக்கு சென்று வழிபடலாம். சிறந்த பலனை பெறுவதற்கு சிம்ம ராசிக்குரிய கிழமையான ஞாயிற்று கிழமையில் “ஓம் ஹரிஹராய பாலமுகுந்தாய நமஹ” என்ற மந்திரத்தை உரு ஜெபித்தவாரே திருமலையாண்டவனை வழிபட வேண்டும்.

கன்னி ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த தினத்திலும் திருப்பதி பெருமாளை வழிபடலாம். பெருமாளை வழிபட்டு சிறந்த பலன்களை பெறுவதற்கு புதன் கிழமையன்று இக்கோவிலுக்கு சென்று “ஓம் ஹ்ரீம் பீதாம்பராய பரமாத்மனே நமஹ” என்ற மந்திரத்தை துதித்த வாறே திருமாலை வழிபட வேண்டும்.

துலாம் ராசியினர் திருப்பதி திருமலை கோவிலுக்கு புரட்டாசி மாதத்தில் வாரத்தின் எந்த நாளிலும் சென்று வழிபடலாம். பெருமாளின் சிறந்த அருள் உங்களுக்கு கிடைக்க இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்திற்குரிய தினமான வெள்ளிக்கிழமையில் ஓம் ராம் தசாரதாயே நமஹ” என்கிற மந்திரத்தை கூறிய வாறே தரிசித்தால் மிகுந்த நலமுண்டாகும்.

விருச்சிகம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் எந்த கிழமையிலும் தாராளமாக வழிபடலாம். இருந்தாலும் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால் முழுமையான பலனை பெறுவதற்கு செவ்வாய் கிழமையில் “ஓம் நாராயணாய நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்த வாறு திருமலையப்பனை வழிபடுவது சிறப்பானதாகும்.

புரட்டாசி மாதத்தில் தனுசு ராசியினர் திருப்பதி ஏழுமலையனின் கோவிலுக்கு வாரத்தின் எந்த கிழமையிலும் சென்று வழிபடலாம். ஆனாலும் நாராயணனின் முழுமையான அருளையும் நற்பலன்களையும் பெறுவதற்கு இந்த ராசிக்குரிய வியாழக்கிழமையில் ஏழுமலையானை “ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் தரணி தராய நமஹ” என்று கூறி வழிபடுவது சிறப்பானதாகும்.

மகரம் ராசியினர் திருமலைக்கு புரட்டாசி மாதத்தில் எல்லா நாட்களிலும் சென்று வழிபடலாம். பெருமாளின் விஷேஷ அருளை பெறுவதற்கு இந்த ராசிக்குரிய சனிக்கிழமைகளில் வேங்கடநாதனை வழிபாடும் போது “ஓம் ஸ்ரீம் வாத்சல்யாய நமஹ” எனும் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தவாறு வேங்கடவனை சேவிப்பது நல்லது.

கும்பம் ராசியினர் புரட்டாசி மாதத்தில் திருமலைக்கு வாரத்தின் எந்த நாளிலும் சென்று வழிபடலாம். திருமாலின் முழுமையான நல்லருள் மற்றும் நற்பலன்களை பெறுவதற்கு இந்த ராசிநாதனாகிய சனிபகவானின் அருள்நிறைந்த சனிக்கிழமையில் “ஓம் ஸ்ரீம் உபேந்திராய அச்சுதாயா நமஹ” மற்றும் “ஓம் க்லீம் கோவிந்தா கோபாலாய நமஹ” என்ற மந்திரங்களை ஜெபித்த வாறு வணங்க வேண்டும்.

திருமலை ஸ்ரீனிவாசன் கோவிலுக்கு புரட்டாசி வாரத்தின் எந்த நாளிலும் மீன ராசியினர் சென்று வழிபட்டாலும் நன்மையே. மகாவிஷ்ணுவான திருமாலின் நல்லருளை பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் திருமலை கோவிலுக்கு சென்று “ஓம் ரதங்க சக்ராய நமஹ” எனும் மந்திரத்தை ஜெபித்த வாறு பெருமாளை சேவிப்பது சிறப்பானதாகும். – இனையதள பதிவாளருக்கு நன்றி!.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.