Views: 86
வணக்கம்!! இன்று வரலாற்றில் சர்வதேச ஓசோன் தினம் நாடுகள் எங்கும் கொண்டாடப்படுகிறது.
இன்றய தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கை வளங்கள் பாதிக்க படுகிறது. அதில் இந்த ஓஸோன் படலம். சரி ஓஸோன் படலம் என்றல் என்ன.
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி ‘டாப்சன்” அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் தற்போது உள்ளன. இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
நமது வீடுகளில் கரியமில வாயுவை எப்படி கட்டுப்படுத்தலாம்?
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில
வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி. இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால் நமது முன்னோர்கள் ஒருவித வழிபாட்டு நம்பிக்கை வளர்த்திருப்பது துளசி செடி.
துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது. துளசி ஓசோனைப் பாதுகாப்பதுடன், 4 ஆயிரம் விதமான வியாதிகளுக்கு குணமளிக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் அல்லது 720 கோடி மூங்கில் மரங்கள் அல்லது 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை. ஆகவே நம்முடைய சுற்றுசூழல் பாதுகாப்பதில் நமது கடமை.