Views: 130
பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழிகை, 31 வினாடி, 15 தர்ப்பரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய வருடம் என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமாகும். சந்திர வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும். 5 வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை வரும். அறிவியல் ரீதியில் வானிவியல் அடிப்படையில் அற்புதமாக அமைக்கப்பட்ட ஏற்பாடே அறுபது வருடச் சுழற்சி ஆகும். தமிழரின் வானவியல் அறிவு பிரமிக்கத் தக்கது. பிரபவ தொடங்கி அக்ஷய முடிய அறுபது ஆண்டுகளைத் தமிழ் வருடங்கள் என்றே கூறுகிறோம். தமிழர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடத்தையே கடைப்பித்து வந்தனர். ஆகவே அறுபது வருடங்களும் தமிழ் வருடங்கள் ஆகிவிட்டன.
இந்த புத்தாண்டு கலி யுகாதி 5120 விளம்பி வருடம். விளம்பி வருடம் என்பதை தமிழில் பிரகாசமான, ரம்யமான வருடம் என கொள்ளலாம். தமிழரின் 60 வருட சுற்று வட்டத்தில் 32வது வருடமாகும்.
விளம்பி வருட தமிழ் வெண்பா
விளம்பி வருடம் விளையும் கொஞ்சமாரி
அளந்து பொழிய மரசர்-கலிங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதாகுங்கொடுமை
ஆவாபுகலவரி தாம்
இந்த புத்தாண்டில் விநாயகர் மற்றும் குலதெய்வ வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்து, குரு, பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி, அவர்களின் ஆசி பெற்று, உற்றார், உறவினர், நண்பர்களுடன் வாழ்த்து பேசி, அறுசுவை உணவுடன் வேப்பம்பூ ரசம் மற்றும் மாங்காய் பச்சடி உண்டு எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்