X

சந்திர கிரகணம்

Views: 71

சூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்திர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு.

இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் ‘பூர்ண சந்திரகிரகணம்’ இது. இந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது.

இந்த வருடம் நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும்.

சந்திர கிரகணம், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது. சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள், நிச்சயம் வெளியே வரக்கூடாது.

ஓம் சந்த்ராய நம:

சந்த்ர த்யான ஸ்லோகம்

ச்வேதாம்பரான்வித வபும் வரசுப்ரவர்ணம்
ச்வேதாச்வ யுக்த ரதகம் ஸர ஸேவிதாங்க்ரீம்
தோர்ப்யாம் த்ருதாபயகரம் வரதம் ஸுதாம்சும
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி சந்த்ரம்

சந்த்ர காயத்ரீ மந்திரம்

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தந்நோ ஸோம: ப்ரசோதயாத்

சந்த்ர ஸ்தோத்ரம்

ஆப்யாயஸ்வ ஸமேதுதே விஸ்வத: ஸோமவ்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய ஸங்கதே:

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.