X
    Categories: Information

உலக வறுமை ஒழிப்பு தினம்

Views: 88

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக இந்நாள் 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் உலக

ளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1992-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17-ஐ வறுமை ஒழிப்பு நாளாகஅதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை கூடிய நாடான சீனாவில் வறுமை ஒழிப்பு சாதனை, உலகின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கைத் தூண்டி, உலக வறுமை ஒழிப்புப் பணிக்குப் பெரிய பங்காற்றியது. என சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவின் அலுவலகத் தலைவர் Fan Xiaojian கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில், வறிய மக்கள் தொகையைப் பாதியாகக் குறைப்பது என்ற இலக்கை முன்கூட்டியே நனவாக்க முனையும் ஒரு நாடாகவே சீனா உள்ளது.

ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, தங்குமிடம், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள் தொடர்பான நிலையைக் குறிக்கின்றது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது. அபிவிருத்தியடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.