X

மகாளய அமாவாசை

Views: 201

ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது.

புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.

அந்தளவுக்கு விரதங்களும், வழிபாடுகளும், விழாக்களும், பண்டிகைகளும் இம்மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும்பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’ என்றும் ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவார்கள். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம்.

இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.  அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் வழிபாடுகள் செய்யலாம்.

மாகாளய அமாவசை என்பது புரட்டாசியில் வரும் பௌர்ணமி முதல் அமாவாசைவரை வரும் பட்சம் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் வரும் காலம் மாகாளய அமாவாசை  மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

மாகாளய பட்சத்தில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

பௌர்ணமி – பெண்களுக்கு மனோபலத்தையும் சக்தியையும் கொடுக்கும்

1. பிரதமை – வெல்லம் தவிடு உருவிய அகத்துக்கீரை  கடன் நீங்கி தனலாபத்தை தரவல்லது

2. துவிதியை – மக்கட்ச் செல்வம், சந்ததிபெருகுதல்

3. திருதியை – நியாயமான விருப்பங்கள், தடைபட்ட காரியங்களில் வெற்றி

4. சதுர்த்தி – எதிரகிளினால் வரும்தொல்லை நீங்கி மனோதைரியம் அடைதல்

5. பஞ்சமி – செல்வம் ஆத்தி பூர்வீக சொத்து அடைதல்

6. சட்டி – புகழும் உயர்வும் நன்மதிப்பும் கிடைத்தல்

7. சப்தமி – தலைமைப் பதவி பதவி உயர்வு அரசுப் பணி கிடைத்தல்

8. அட்டமி – புத்தி பெருகுதல், கல்வியில் மேன்மை குடும்பத்தில் காணாமல் போனவர்களுக்கான திதியாகும் இவை வெகுகாலம் தடைபட்டுவரும் திருமணத்தை நடத்திவைக்கும்

9. நவமி – திருமணதடை நீங்கும், கனவன் மனைவி அன்பும் உறவும் மேன்மைபடும்

10. தசமி – ஆத்ம சாந்தி, நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும்

11. ஏகாதசி – வேதங்களும் நற்கலைகளும் கல்வியில் ஞானமும் கிடைக்கும்

12. துவாதசி – தங்கம் ஆபரணங்கள் நவரத்திணங்கள் இல்லத்தில் பெருகும்குடும்பத்தில் திருமணமாகாமல் உயிர்நீத்தவர்கள், துறவரம் கண்டு உயிர்நீத்தவர்களுக்கு திதி கொடுக்க சிறந்த நாள் மகா புண்ணியம்

13. திரியோதசி -சூரியன் உத்திரம், அசத்தம், சித்திரை நட்சத்திரங்களில் நிற்க சந்திரன் மகம் நட்சத்திரத்தில் நிற்க வரும்காலம் (கஜச்சாயா) என்னும் சிறந்த நாள் இந்த நாளில் தாயார் வர்க்கத்தினருக்கு திதிகொடுத்தல் சாலச்சிறந்தது. நோயற்ற நிலை, லட்சுமிகடாட்சம், புத்தி, கால்நடை வளம் பெறுக நன்று

14. சதுர்த்தசி -விபத்து, துர்மரணம், ஆயுதத்தால் மரணம், கொலையுண்டவர்களுக்கு திதி கொடுக்க

15. மகாளய அமாவாசை – சந்திரன் பரணி நட்சத்திரத்தில் வரும் காலம் “மகா பரணி ” காலம் அன்றைய யோகம் வியதீபாத யோகம் இன்றைய தினம் நாம் கொடுக்கும் திதி மற்றும் தர்ப்பணம் மேலே சொல்லபட்ட அத்தனை திதிகளுக்கான பலன்களை அளிக்ககூடியது

அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், சாஸ்திரத்தில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் இருக்கிறது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்கக் கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது. ஆகையால் அமாவாசையன்று புது காரியங்கள் தொடங்குவது, அட்வான்ஸ் கொடுப்பது, அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஐயன் வள்ளுவன் மேற்கூறிய நம் மறைந்த முன்னோர்களின் வாழ்வயில் முறையை தனது மாபெரும் படைப்பான திருக்குறளில் பிரதிபளித்தார் இன்று அது அனைத்துலக மக்களால் போற்றப்படுகின்றது

குறள்:

தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்தானென்றாங்கு

ஐம்புலத்தாறுஓம்பல்தலை.

பொருள்:

தென்புலத்தார், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்என்னும் ஐந்துவகையாளரிடத்தும் செய்யவேண்டிய அறச்செயல்களைத்தவறாமல் ஒருவன்செய்தல் சிறந்தகடமையாகும். என்று மனிதவாழ்வியலின் மாபெரும் கடமையாக கூறுகின்றார்

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.

புண்ணிய மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக! வாழ்கின்ற நாட்களிலும் பெற்றோர்களை நன்றாக பராமரித்து ஆசி பெறுவோமாக……

ஓம்சிவசிவஓம்

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.