X

மந்திரம் ஓம்

Views: 311

ஓம் மந்திரத்தை பற்றிய பதிவு!!

பத்மாசனத்தில் அமர்ந்து இடது கைப்பெருவிரலால் இடது மூக்கை மூடி வலது நாசியால் மூச்சை உள்ளிழுத்து இடது கை மோதிர விரல் கொண்டு வலது நாசியை மூடி இடது நாசியால் மூச்சை வெளிவிடுவது என்பதை மூச்சு பயிற்சி என்கிறோம்.

இதில் மூச்சை உள்ளிழுப்பதை பூரகம் என்பார்கள். வெளிவிடுவதை ரேசகம் என்பார்கள். நன்றாக மூச்சு பயிற்சியை கற்றவர்கள் அதன் அடுத்த படியான மூச்சை உள்ளுக்குள் அடக்கி நிறுத்தி வெளிவிடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். மூச்சை அடக்கும் நிகழ்வை கும்பகம் என்பார்கள்.

எடுத்த எடுப்பில் மூச்சை அடக்கி வெளிவிடுதல் உடலுக்கு மிகவும் கெடுதலான பலனை தரும் என்பார்கள். எனவே, சாதாரண வாழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றது ஓம் என்னும் தியான மூச்சு பயிற்சி. அதாவது, ஓம் என்ற ஒலி தான் இந்த மூச்சு பயிற்சியின் சூட்சுமம்.

மூச்சை முடிகிற வரை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு நன்றாக விரிந்து வர வேண்டும். இப்படி இழுக்கப்பட்ட மூச்சை உள்ளே எக்காரணம் கொண்டு நிறுத்தாமல் மெதுவாக வெளிவிட வேண்டும்.

அப்படி வெளிவிடும் போது கண்களை மெதுவான நிலையில் மூடியிருந்து வாயைத்திறக்காமல் ஓம் என்ற ஒலியுடன் வெளிவிட வேண்டும். இது தான் ஓம் தியான மூச்சு பயிற்சி. ஒவ்வொரு நாளும் மனதை அதன் போக்கிலேயே விட்டு அரை மணி நேர அளவுக்கு அதிகாலையில் தியானத்தில் அமர்ந்திக்க வேண்டும்.

இந்த அமைதி தியானத்தை முடிக்கும் தருவாயில் ஒரு பத்து நிமிட கால அளவுக்கு இந்த ஓம் தியானத்தை செய்து வாருங்கள். இதன் நன்மையை உணருங்கள்.

1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ‘ ஆ ‘ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
நாம் ‘ஆ’ என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. ‘ம்’ என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும்.

2. ‘ஓம்’ எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகபடுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம் ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். ‘ஓம்’ என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும் இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ‘ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் ‘எண்டார்பின்’ என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

9. ‘ஓம்’ மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. ‘ஓம்’ என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்து

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.