X

‌விடுகதைக‌ள் – 29Aug17

Views: 214

‌விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது

  1. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?
  2. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?
  3. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
  4. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
  5. உச்சிக் குடுமிக்காரன், கொள்ளிவச்சா வெடிப்பான் அது என்ன?
  6. பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன?
  7. பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன?
  8. குரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன?
  9. குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
  10. குடுக்கை நிறைய வைரமணி – அது என்ன?

View Comments (1)

  • 1. பூனை
    2. பம்பரம்
    3. செல்பேசி
    4. தபால் தலை
    5. பட்டாசு
    6. எலுமிச்சம்பழம்
    7. அன்பு
    8. குயில்
    9. அழுகை
    10.மாதுளம் பழம்

Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.