Views: 1152
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்.
கஜாநநம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்.
எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
மூல மந்திரம்
*ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே*
*வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா*
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.
வல்லப கணபதி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரவும். நல்லதே நடக்கும்
உச்சிஷ்ட கணபதி மந்திரம்:
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்தி முகாய,லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா
வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.
கடன் தீர கணபதி மந்திரம்:
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.
மஹாஹஸ்தி விநாயகர்:
பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.
ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய மஹாஹஸ்தி தக்ஷ்ணேன
வாஞ்சா கல்பலதா கணபதி:
நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
கிரக தோஷ பாதிப்புகள் விலக விநாயகர் ஸ்லோகம்
ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக 😐
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம சசீ ரவிஹி 😐
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||
– இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்
சர்வ வித்யா கணபதி மந்திரம்
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார். வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம்.