Views: 29
“அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு”
குறள் 74, அன்புடைமை / The Possession of Love
அன்பு – அன்பானது
ஈனும் – கொடுக்கும்
ஆர்வம் உடைமை – பிறருக்கு ஆர்வத்தை (அன்புடையவர்கள் மீது)
அது – அந்த ஆர்வமானது
ஈனும் – கொடுக்கும்
நண்பு – நட்பு
என்னும் – என்று சொல்லக்கூடிய
நாடாச் – தேடிச் செல்லாமல் தானே வரக்கூடிய
சிறப்பு – சிறப்பு.
ஒருவர் மற்றவரிடம் அன்பாக பழகும் இயல்பினராயிருந்தால், அவ்வியல்பு பிறர்க்கு அவர்மேல் ஆர்வத்தை உண்டாக்கும். அவ்வார்வமானது, தேடாமலே வந்து சேரும் சிறப்பினைப்போல, உயரிய நட்புறவுகளை சேர்க்கும் என்பதே இக்குறளின் கருத்து.
If someone has a friendly attitude to someone else, it can cause interest in others. The idea is that this will add to the best friendships,