Views: 142
உலக தைராய்டு தினம் இன்று; மனிதனின் கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பி, நாளமிள்ளா சுரப்பிகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் கீழ்ப் பகுதியின் மையத்தில் உள்ளது. உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்பவை இந்த ஹார்மோன்கள்தான்.உடலின் தட்பவெப்பநிலையை சீராக வைத்திருப்பது, தோலின் மென்மைத்தன்மையைப் பாதுகாப்பது, பெண்களின் மாத விடாயை ஒழுங்குபடுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தை களின் வளர்ச்சி இவை அனைத் தையும் பராமரிப்பது இந்த தைராக்ஸின்தான். தைராய்ட் சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாகவோ அல்லது அதிக மாக சுரந்து அது, உடல் நலத்தைப் பாதிக்கும்.
தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..
ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்.. T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..
தைராய்டு நோயை ஆரம்பத்தி லேயே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு கட்டுப் படுத்தலாம். தைராய்ட் பாதிப்பு என்பது வாழ்க்கை முழுக்க இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாக கையாண்டால் மற்றவர்களைப்போல ஆரோக் கியத்துடன் வாழலாம். இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் மே 25-ம் தேதி சர்வதேச தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.