Views: 131
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய நாடு களின் பண்பாடு, வரலாறு குறைவாகவே உள்ளது. எனவே வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் அருங்காட்சியகங்களை அதிக அக்கறையுடன் பாதுகாக்கின்றனர். இந்தியாவில் கோயில்கள், குகைகள், நினைவுச்சின்னங்கள், சமாதிகள், அரண்மனைகள் என வரலாற்றுப் பதிவுகள் நிறையவே இருப்பதால், அருங்காட்சியகங் களின் மதிப்பு தெரிவதில்லை. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள “தி கிங் சென்டர்’ என்ற மியூசியம், உலகில் உள்ள மியூசியங் களிலேயே தலைசிறந்த மியூசியமாக கருதப்படுகிறது. அமெரிக்க கருப்பின மக்களின் ஏகோபித்த தலைவராக விளங்கிய மார்டின்லூதர் கிங் ஜுனியரின் நினைவைப் போற்றும் வகையில் இந்த மியூசியம் உள்ளது.