Views: 247
- இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
- ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
- உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
- பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது?
- உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார்?
- நின்று கொண்டே இருந்துவிட்டு பலருக்கும் வழி கூறுவான்.
- உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் – அது என்ன?
- கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் – அது என்ன?
- ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் – அது என்ன?
- ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் – அது என்ன?
- ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
- அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?
- அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை – அவன் யார்?
- உணவு கொடுத்தால் வளருவான், நீர் கொடுத்தால் மாண்டு போவான் – அவன் யார்?
View Comments (1)
1. பட்டாசு
2.எறும்புக் கூட்டம்
3.அஞ்சல் பெட்டி
4.வெளவால்
5.கடல்
6.வழிகாட்டிப் பலகை
7.வியர்வை
8.மணியோசை
9.கத்தரிக்கோல்
10.இமைகள்
11.நிழல்
12.ஆமை
13.பந்து
14.வெண்டைக்காய்
15.நெருப்பு