Views: 454
- காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?
- சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
- பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்கு பஞ்சுபோன்ற சதை. அதற்குள் கடினமான எலும்பு. உடைத்தால் உள்ளமெல்லாம் வெள்ளை நிறம். அது என்ன?
- பருத்த வயிற்றுக்காரி படுத்தேக் கிடப்பால் அவள் யார்?
- இந்த நீதிபதிக்கு உயிர் இல்லை, ஆனால் ஒழுங்கான நியாயம் தருவார். அது என்ன?
- உமி போல் பூ பூக்கும்; சிமிழ் போல் காய் காய்க்கும். அது என்ன?
- இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
- அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் அது என்ன?
- ஒரே வயிற்றில் வாழ்ந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது என்ன?
- எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது அது என்ன?
View Comments (1)
1.சப்பாத்திக்கள்ளி
2.உதடு-பற்கள்
3.தேங்காய்
4.தலையணை
5.தராசு
6.நெல்லிக்காய்
7.கைரேகை
8.ரயில் பெட்டி
9.கடிகார முட்கள்
10.இடியாப்பம்