Views: 128
கோடை ஆரம்பமானதிலிருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். உஸ்… என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. ஆக வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது கோடை காலத்தில் வெயிலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்
முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும்.
அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம். இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.
கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.
கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சிரணமாகும்.
மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசணிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
பயறு வகைகளில் பச்சைப் பயறு மற்றும் உளுந்து உஷ்ணத்தை நீக்கும். கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றால் உஷ்ண தாகம் குறையும்.
உடல் சோர்வை போக்க கண்ட கண்ட எனர்ஜி ட்ரிங்க்சை விட நமது பானாகாரம் மிகவும் நல்லது
பானாகாரம் செய்முறை
கருப்பட்டி – 50 கிராம்
புளி – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
எலுமிச்சைம்பழம் – 1/4 துண்டு
நீர் – 500 மில்லி லிட்டர்
செய்முறை : 50 கிராம் கருப்பட்டி மற்றும் 50 கிராம் புளியை 500 மில்லி லிட்டர் கரைத்து 5 கிராம் ஏலக்காய் பொடியையும் எலுமிச்சம் பழத்தையும் ஒன்றாக கலந்துகொள்ளவும்.
உடலின் நீர் சக்தி குறையாமல் பார்க்க வேண்டும் –தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் ..
பாட்டி வைத்தியம்
* கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
* கானாம் வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
* ஐந்து கிராம்பு மற்றும் 20 சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும்.
* குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
* சர்ப்பகந்தா இலையை வதக் கிச் சாறு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
* சீரகத்தை தண்ணீரில் கொதி க்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.