Views: 43
கடல்நீரைக் குடிநீராக்குவதில் `கிராபின்` வடிகட்டி பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராபின், உருக்கைவிட வலிமையானது, அதிகபட்ச நெகிழ்வுத்தன்மை உடையது, மிக மெல்லியதும் கூட. கிராபின் வடிகட்டியைப் பயன்பாடுத்துவதால் செலவு குறைவு என்பதோடு, சுற்றுசூழலுக்கும் பாதிப்பில்லை என்று விஞ்ஞானிககள் கூறுகின்தறனர், இங்கிலாந்து விஞ்ஞானிககள் உருவாக்கியுள்ள இந்த கிராபின் வடிகட்டி, கோடிக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவையை , குறைந்த செலவில், சுற்றுசூழலுக்கும் பாதிப்பின்றி தீர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராபின் ஒரே அணுவின் தடிமன் அளவுக்கு மிக மெல்லிய தகடாக மாற்றலாம். அதனாலேயே இது ஓர் அதிசயப்பொருள் எனப்படுகிறது. கிராபின் வடிக்கட்டி கடல் நீரில் உள்ள உப்பை 100 சதவீதம் பிரித்துஎடுத்து சுத்தமான குடிநீர் தரக்கூடியது.
`உலக அளவில் பல லட்சம் பேருக்கு குடிநீரை கொடுப்பது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமாகும். இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் இதை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம்` என்கிறார், இந்த ஆய்வை மேற்கொண்ட மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராகுல் நாயர். மற்ற வடிகட்டிகளைப் போலவே கிராபின் தாளிலும் தண்ணீரை வடிகட்டி அனுப்பும் அளவுக்கு சின்னஞ்சிறு துளைகள் உள்ளன. முன்பு இந்த கிராபின் தாள் மூலம் தண்ணீரை வடிகட்டும் முயற்சி மேறகொள்ளப்பட்ட போது, அது நாள்படநாள்பட பலவீனம் அடைந்தது அதன் துளைகள் பெரிது ஆயின. அதனால் இந்த வடிகட்டியின் வடிகட்டும் திறன் பாதிக்கப்பட்டது.
தற்போது மான்செஸ்டர் விஞ்ஞானிகள் இந்த துளைகள் விரிவடைவதை தடுக்கும் வேதிப்பூச்சைக் கண்டுபிடித்து இந்த தாளின் பூசியிருப்பதால் இதன் துளைகள் விரிவுவைடவது தடுக்கப்பட்டு உப்பு நீர் நல்ல குடிநீராக வடிகட்டிப்படுகிறது. வரும் 2025-ம் ஆண்டுவாக்கில் உலகின் சுமார் 120 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றி தவிப்பார்க்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ள நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கயத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.